100
❖ LDMMLDMOED - 7
மகிழற்பாலனவாய் இருக்கின்றன. அவைபோலவே, சகுந்தலை, தந்தையாராகிய தம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாதென்று கூறி ஆற்றாளாகியபோது, இவர் இவர் அவளை அவளை ஆற்றுந் திறமும் பாராட்டத் தக்கதா யிருக்கின்றது (79).
இவ்வாறெல்லாம் அன்பிலும் அறிவிலும் மிக்காராயுள்ள ம்முனிவரர் உண்மைத் துறவிக்குள்ள பற்றற்ற நெஞ்சம் வாய்ந்தவரா யிருத்தலும் நினைவு கூரற்பாற்று. தம்பால் உள்ளவரையில். தம்மால் ஆவன செய்து முடிக்கும் வரையில் தம்மொடு தொடர்புடையாரிடத்து அளவிறந்த அன்புவைத்து ஒழுகுங் கனிந்த நெஞ்சத்தினரான துறவிகள், அவர் தம்மை அவர்க்குரியார்பால் ஒப்படைத்து விட்டபின், அவரை நினைந்து நினைந்து ஏங்கம் பற்றுள்ளம் உடையராகார். அப்பெற்றியரான உண்மைத் துறவிகளின் பற்றற்ற நிலை இங்கே காசியப முனிவர்மாட்டுங் காணப்படுகின்றது. சகுந்தலையைக் கணவன் இல்லத்திற்குப் போக்கும் வரையில் அவளது பிரிவாற்றாது வருந்திய இவர், அவளை அங்கே போக்கியபின் அவளை நினைந்து துயருறுதலின்றி மகிழ்ந்த மனத்தினராய்த் தமது தவ வொழுக்கத்தின்மேற் செல்லுதலை நான்காம் வகுப்பின் ஈற்றிற் காண்க (80). உண்மைத் துறவிகளாகிய விலையற்ற அரிய முழு மாணிக்கச் சிறு திரளினிடையே யிருந்து ஆசிரியர் தமது மதிநுட்பத்தாற் றேர்ந்தெடுத்து விளக்கி ஒளிரவைத்த இம் முனிவர்மாமணி, அச்சிறு மாத்திரளின் நன்மாட்சியினை விளக்கித் தெள்ளொளி விரிக்கும் நல்லடையாள முழுமணியாய்த் திகழ்தல் கண்டு இன்புறுக!
இனி, இந்நாடகத்தின் ஈற்றில் வருவாராகிய மாரீச மாமுனிவருங் காசியபரைப் போலவே அன்பு அருட்குணங் களில் மிகச் சிறந்தாராயிருத்தல் கண்டுகொள்க.
இனி, மாதரிற் றுறவு பூண்ட கௌதமியம்மையார் ஆண்டில் முதிர்ந்தவராகவும் அருளொழுக்கத்தில் மிக்கவ ராகவுங் காணப்படுகின்றார் (95,99). காதல் மணமும் முதியோர் உறவினரைக் கலந்தே செய்யப்படுதல் வேண்டுமென்பது இவ்வம்மையாரது கருத்து (89). இவ்வகையில் இவர்க்குங் கண்ணுவ முனிவர்க்குங் கருத்து வேற்றுமை யுளதாதல்