பக்கம்:மறைமலையம் 7.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் 7

சொற்களே; அச்சொற்களும் அரசனுக்கு ஓர் அடையாளங் காட்டுமாறு சகுந்தலைக்குக் கற்பிக்குமள விலும், இறுதியாக அரசனை நோக்கி, “இதோ நும்மனைவி யிருக்கின்றார், நீர் அவரை ஏற்றுக்கொள்ளினுங் கொள்ளுக. தள்ளிவிடினும் டுக. தன் மனைவியினிடத்து எவ்வகையான தலைமை

செல்லு

அது

சலுத்தினும் பொருந்துவதே யாம்' என்னும் அத்துணையே சொல்லிவிட்டுத், தன்னுடன் போந்த கௌதமி யம்மையாரையும் உடன் மாணாக்கனையும் அழைத்துச் மளவிலுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ம L இனி, அரசனால் விலக்கப்பட்டுச் சகுந்தலை வேறு புகலிடங் காணாத நைந்த வுள்ளத்தினளாய் ஆற்றாது அழாநிற்கையிற், கன்னெஞ்சமுடையாரும் அவளை அந்நிலையிற் காண்குவ ராயிற் றமது கன்னெஞ்சமுங் கரைந்துருகுவ ரன்றிப் பிறிது ஆகார். ஆ னாற், சார்ங்கவரனோ 'தானாகவே பதைத்துச் செய்த ஒரு செய்கையானது இப்படித்தான் துயரத்தைத் தரும் என்று வெடுவெடுப்புடன் பேசிப் புண்ணிற் சுடுகோலை நுழைப்பவனா யிருக்கின்றான்! இதுவும் போதாதென்று, கானகம் நோக்கிச் செல்லுந் தம்முடன், அழுதுகொண்டு பின்றொடர்ந்த சகுந்தலையைப் பார்த்து சீற்றங்கொண்டு "தூர்த்தே! தன் னெடுத்த மூப்பாய் இருக்கப் பார்க்கின் றனையோ? அரசன் சொல்லுகிறபடியே நீ இருந்தாயானால், நின் தந்தையார் தமது குடியினின்றும் வழுவிய ழுவிய உனக்கு யாதுதான் செய்யக் கூடும்? அவ்வாறின்றி நின் ஒழுக்கந் தூயதென்றே அறிந்தா யானால், நின் கணவன் வீட்டில் அடிமையாக வாயினும் இருத்தலே உனக்குத் தக்கதாகும். நில், நாங்கள் போகிறோம்" என்று கொடிது கூவிச் சொல்லிப் போய்விடுகின்றான். உடன் பழகாதவரும் அத்துணை துயர் கூர்ந்த நிலையிற் சகுந்தலையைத் தனியே விட்டுச் செல்லார்; மற்றுப் பிள்ளைமைப் பருவந் தொட்டே சகுந்தலைக்குத் தமையன்போல் உடன் வளர்ந்து, அவளது தூய நடையும் மெல்லிய இயல்புமெல்லாம் ஒருங்கறிந்தவனா யிருந்தும், அவ்விரங்கத்தக்க நிலையிலும் அவளொழுக்கத்தைத் தானும் ஐயுற்றுப் பேசியதல்லாமலும், அவளை மிக இழிந்த சொல்லால் வைதுவிட்டும் ஏகுஞ் சார்ங்கரவனது அறக் கொடிய நெஞ்சத்தி னியல்பை ஒருங்கால், இவனை யொத்த

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/127&oldid=1578256" இலிருந்து மீள்விக்கப்பட்டது