சாகுந்தல நாடக ஆராய்ச்சி
103
இரக்கமிலா வன்னெஞ்சர் உலகில் மிகச் சிலரேதாம் இருத்தல் கூடு மென்பது புலனாகும். இக் கொடியானுக்கு அஞ்சிப் போலும் இரக்க நெஞ்சம் வாய்ந்த கெளதமியம்மை யாருஞ் சகுந்தலையை உடனழைத்துக் கொண்டு மீண்டுங் கானகஞ் செல்லாமல், அவளைத் தனியேவிட்டுச் செல்வாரா யினது! சார்த்துவதன் சார்ங் கரவனைப்போல் அத்துணை அறக் கொடியன் அல்லனாயினும், மறுத்துவிட்ட அரசனிடமே சகுந்தலையை விட்டுப் போக எண்ணி அதனை முதற்கண் அரசனுக்குக் கூறுவோன் அவனாகவே யிருத்தலின் அவனும் ஏனையானில் அரைப்பங்கு ஈரமற்ற நெஞ்சினனாகவே காணப்படுகின்றான். இரக்கமும் அருளும் ஒருங்கு குடி கொண்ட கண்ணுவ மாமுனிவர்க்கு இரக்கமில்லா இவ்வன் னஞ்சரிருவரும் மாணாக்கராய் அமர்ந்தமை தீஞ்சுவை நீர் நிறைந்தொழுகும் ஒரு வளவிய யாற்றின் பக்கத்தே கருங்கற்பாறைகள் அமைந்திருத்தலையே ஒத்திருக்கின்றது!
மேலும், இம்மாணவர் இருவரும், பெண்பாலார்க்கு எத்தகைய உரிமையுந் தலைமையும் ஆகாவெனவுங், கணவன் தன்னையொரு தொழுத்தையாக நடத்தினும் மனைவி அதற்கு ஒருப்பட்டு நடத்தலே செயற்பாலள் எனவுங் கருதுபவரா யிருத்தலின், இவர் மக்கட்பிறவியின் ஒத்த உரிமையும் இறைவனது அருள்நோக்கமுஞ் சிறிதும் உணர்ந்தவராகக்
காணப்படுகின்றிலரென்க.
இனி, மேற்காட்டியவாறு தன் கணவனாலுங் கைவிடப் பட்டுத், தன்னுடன்போந்த உறவினராலுஞ் சினந்து கைவிடப்பட்டுச் சகுந்தலை தனக்கு க ஏதொரு சார்புங் காணாளாய்ப் பெருந்துயர்க்கடலுட் கிடந்து, தன் உயிர் தன் உடற்கண் உள்ளதோ! அன்றி அதனைவிட்டுப் புறத்தே யுள்ளதோ வெனப் பொறியும் புலனுங் கலங்கித் துன்புறும் இந்நிலையில், அவளுக்கு ஒரு சார்புங் காட்டாது கதையினை நடாத்தல் நல்லிசைப்புலமை யாகாமையின், ஆசிரியர் காளிதாசர் இப்பேரிடுக்கண் நேர்ந்த இந் நேரத்தில் அவட்கு ஒரு சார்புகாட்டும் நுட்ப அறிவின் றிறம் இதனைப் பயில்வார்க்குப் பெரியதோர் ஆறுதலைப் பயவா நிற்கின்றது. அஃதென் னென்றால், எல்லாருஞ் சகுந்தலையைக் கைவிட்ட அந்