பக்கம்:மறைமலையம் 7.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

105

பூண்டாற்கு இன்றியமையாத கடமையாம். அங்ஙனம் அ ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும்வரையில் அத்தலைவன் எவ்வளவோ அமைதியும் அமைதியும் எவ்வளவோ எவ்வளவோ பொறுமையும் வாய்ந்தவனாயிருத்தல் வேண்டும். அவ்வாறின்றி விரைந்து ஆராயாது தானே ஒரு முடிவினைத் துணிந்துவிடுவனாயிற் குற்றஞ் செய்யாதவன் அது அது செய்தவனாகவுங், குற்றஞ் செய்தவன் அது செய்யாதவனாகவும் பிழைபடக் கருதி ஒறுக்கப்படுவன், படவே, உலகில் அறமும் நடுவுநிலைமையும் இல்லையாய் அரசியலும் மக்கள் வாழ்க்கையும் நிலைகுலைந்து சிதையும். ஆதலாற், குற்றம் ஏற்றப்பட்டு வந்தானைப் பற்றிய வரலாறு முற்றும், அவனது ஒழுக்கத்தின் நலந் தீங்குகளில் ஒன்றைத் திண்ணமாக நிலைபெறுத்துஞ் சான்றுகளும் பலகாற் பலவாற்றானும் ஆராய்ந்து பார்த்து ஓர் உறுதியான முடிவுக்கு வரும் அத்துணைப் பொறுமையும் ஆராய்ச்சியும் வாய்ந்த ஒரு தலைவனை மக்களுள் ஒருவனாக வையாது வான்உறையுந் தெய்வமாகவே வைத்தல் வேண்டும். இந்நாடகக் கதையுட் போந்த கொத்தவால் துஷியந்த மன்னனுக்குத் தான் உறவு பூண் மைத்துனக் கிழமைக்கு ஏற்பவும், அவனது செங்கோலரசு இனிது நடைபெறுதற்குத் தான் மேற்கொண்ட காவல் நிலைமைக்கு ஏற்பவும், பொறுமை, உண்மையாராயும் மெய்யுணர்வு முதலான சிறந்த இயல்புகள் பொருந்தப் பெற்றவனா யிருத்தல் மகிழற்பால தொன்றாம். இங்ஙன மெல்லாம் பொறுமையோடு உண்மை யாராய்ந்த வழியும், அவ்வுண்மைக்கு மாறுறாமற் குற்றமில்லாரை இனிது கூறி விடுத்தலுங் குற்றமுடையாரை அறங்கூறி யொறுத்தலுங் காவற்றொழில் புரிவார்க்கு இன்றியமையா நடுவுநிலைமை யாகும். உண்மை கண்டும் ஓறாது குற்றமுடையார்பாற் கைக்கூலி வாங்கிக்கொண்டு நடுவின்றி அறத்தின் வழுவுதல் அரசிய லொழுக்கத்தையும், உலகிய லொழுக்கத்தையும் ஒருங் கழிப்பதாகும். ஈண்டுக் கொத்தவால், செம்படவன் கூறிய செய்திகளைப் பொறுமையொடு கேட்ட பின், அச்செம்படவன் குற்றவாளி யல்லனென ஒருவாற்றாற் றுணிந்து, அவ்வளவில் நில்லாது அவன் கையில் அகப்பட்ட அரசனது கணையாழியின் வரலாற்றையும் நன்கறிந்து தெளிவான் வேண்டி, அதனை அரசற்குக் காண்டு போய்க் காட்டி, அதனுண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/130&oldid=1578259" இலிருந்து மீள்விக்கப்பட்டது