106
மறைமலையம் - 7
ஐயுறவின்றித் தெளிதலுங் குறிக்கற்பாலதாகும். அதுவேயு மன்றிச், சகுந்தலையின் விரலை விட்டு நழுவிக் காணாது போய், அதனால் அளவிலாப் பேரல்லல் விளைத்த தனது கணை யாழியை மீண்டுங் காணக்கிடைத்துப், பழைய நினைவு வரப்பெற்ற உவகையால் அரசன் செம்படவற்கு விலையுயர்ந்த பரிசில் கொடுத்து விடுக்கக், கொத்தவால் அதனை முழுதுமாதல் அதிலொரு பகுதியாதல் மறையாது கொணர்ந்து, முற்றுமே அச்செம்படவற்கு வழங்கிய கரப்பில்லா உள்ளப்பான்மை மிக விழுமிய தொன்றாய்த் துலங்காநிற்கின்றது. மேலுந், தன்கீழ்க் காவலாளர் இச்செம்படவனைச் சுடுசொற் கூறி வையுமாப் போல், தலைவனாகிய கொத்தவால் ஏதொரு வன்சொல்லுங் கூறாமையினை உற்றுநோக்குங்கால் இவன் அமைதியும் இனிய மென்றன்மையும் உடையனாதல் தெற்றென விளங்காநிற்கும். ஈதன்றோ தலைமை செலுத்துவார்க்குரிய சீர்த்த இயல்பாகும்? இத்தகைய சீர்த்த இயல்புகள் வாயாத தலைவர்களது ஆட்சியின் கீழிருந்து பெருந்துன்பம் உழந்தார்க்கே, இக்கொத்தவாற் பெருந்தகையின் அருந்தகை மாட்சி நன்கு புலனாகும். ஆசிரியர் காளிதாசர் இத்தன்மையனான ஒரு சிறந்த ஆ ண் கையை ஈண்டு நகர்காவற் றலைமையிற் கொணர்ந் தியைத்தது, அப்பெற்றியனான ஒரு தலைவனின் அருமை பெருமையினை அறிவித்தற்கே போலும்
இனிக், கல்லெல்லாம் மாணிக்கக் கற்களேயாயின் மாணிக்கத்தின் சிறப்புந் தலைமையும் புலனாகவன்றே சிறப்பில்லாச் செங்கற்களும் மிகுதியாய் உளவாதலாலன்றே சிறப்புடைய அருமாமாணிக்கத்தினுயர்வு வீறி விளங்கா நிற்கின்றது? அதுபோலக், கொத்தவாலின அரும்பெருந் தகைமை பொள்ளெனப் புலப்படுதல் வேண்டியே, வல்லியற்கையுஞ் சுடுமொழியுங் கூடிய ஏனை அவன் காவலாளரையும் ஆசிரியர் அவனோடு உடன்வைத்துக் காட்டுவாராயினர். நகர்காவற்காரரிற் பெரும்பாலார் இரக்க நெஞ்சமுங் கண்ணோட்டமும் இன்சொல்லும் இல்லா வன் கண்ணரா யிருத்தலைத் தெரிவித்தற்கே, ஈண்டு ஆசிரியர் அக்கூட்டத்திற்கு அடையாளமாகச் சூசகன், சானுகன் என்னும் ருவரையும் ஈண்டுக் கொணர்ந்து காட்டினாரென்க.