பக்கம்:மறைமலையம் 7.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

107

வி

இனி, இக்கதை நிகழ்ச்சிக்குத் தலைவனுந் தலைவி யுமாயுள்ள துஷியந்தனுஞ் சகுந்தலையுந் துருவாசரது வசை மொழியால் வேறு பிரிந்து நின்ற துயர நிலையை மாற்றி அவரை ஒருங்கு கூட்டுதற்கு, அவர் ஈன்ற மகன் சர்வதமனனும், அவன்றன் ஆண்மைக் குணங்களும் ஒட்டுவாயாயிருத்தல் காட்டுவாம். இந்திரன் நகர் சென்று மீண்டு இந்நிலவுலகு நோக்கிக் கீழ் இழியுங்கால் வழியில் தோன்றிய ஏமகூட மலையைக் கண்டு அதனைச் சுட்டி வினவிய துஷியந்தனுக்கு அம்மலையின் வரலாறும் அதன் கண் மாமுனிவரான காசியபர் தம் மனைவியுடன் தவம் இயற்றுமாறும் மாதலி உரைப்ப, உடனே அரசன் அம்முனிவர் பிரானைக் கண்டு வணங்கும் விழைவுமீ தூர்ந்து, அவரது தவப்பள்ளிக்குச் சென்றவன், மாதலி அம் முனிவரது காலம் அறிந்து வரும்வரையில் ஒரு பிண்டிமர நீழலில் அமர்ந்திருந்தான். அந்நேரத்தில், அங்குள்ள முனிவர் மகளிர் இருவருடன் ஒரு சிறுவன் ஒரு சிங்கக் குட்டியை அதன் தாயினின்றும் பிடித்திழுத்து எடுத்துக் கொண்டு, அம்மகளிர் எவ்வளவு சொல்லியுங் கேளாமல் அதனைக் கசக்கி விளையாட, அம்மகளிருள் ஒருவர் அருகிருந்த அரசனை நோக்கி அதனை அவன் கையினின்றும் விடுவிக்குமாறு வேண்ட, அரசனும் அவ்வாறே செய்கையில், அச்சிறானது வடிவும் அரசனது வடிவும் ஒத்திருத்தல் கண்டு இறும்பூதுற்று அம்மகளிர் அரசனோடு உரையாடும் வகை யிலிருந்து அச்சிறான் தன் மகனே யென்பதும், அச்சிறானின் தாயுந் தன் காதன்மனை யாளுமான சகுந்தலை அங்கே அத் தவப் பள்ளியில் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கின்றா ளென்பதும் எல்லாம் அரசன் ஒருங்குணர்ந்த பேருவகை

யனாய்ச்

சகுந்தலையை மீண்டுந் தலைக்கூடப் பெறுகின்றான். இங்ஙனம் நிகழும் நிகழ்ச்சியிற் சர்வதமனனாகிய அரசன் மகனை முதன்முதற் கொணர் கையிலேயே அவனது அஞ்சா நெஞ்சத்தினையும், ஆண்மை யினையும் புலப்படுத்தும் ஆசிரியரது விரகு பெரிதும் வியக்கற்பால தொன்றா யிருக்கின்றது. ஒரு முழு நிலா நாளின் மாலைப் பொழுதின் றொடக்கத்தே கீழ்பாற் றோன்றும் முழுமதியின் செக்கச்சிவந்த வட்டவடிவும், அந்நாளின் அதே நேரத்தே மேல்பால் மறையும் நிலையில் தோன்றுஞ் செஞ்ஞாயிற்றின் செக்கச்சிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/132&oldid=1578261" இலிருந்து மீள்விக்கப்பட்டது