பக்கம்:மறைமலையம் 7.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

  • மறைமலையம் - 7 ×

வட்டவடிவும் பெரும்பாலும் ஒத்த தன்மையவாய்க் காணப் படினும், ஒன்று ஆற்றலிற் குறைந்து தண்ணென்று விளங்கு தலும், மற்றொன்று ஆற்றலின் மிக்கு வெச்சென் றிருத்தலுங் கண்டாமன்றே. அது போலவே, ஒரு முனிவர் மகனும் ஓர் அரசன்மகனும் வெளித் தோற்றத் தளவிற் பெரும்பாலும் ஒத்திருப்பினும், முன்னையோன் அமைதியும் அச்சமும் உடையனா யிருத்தலும், பின்னையோன் சுருசுருப்பும் அஞ்சா மையும் உடையனாயிருத்தலுந் தனித் தனியே பிரிந்து விளங்கா நிற்கும். இவ்வாறு பிரிந்து விளங்கும் அடையாளங் கொண்டே துஷியந்தன் இச்சிறுவனை, “ஏதோ ஓர் உரமான சுடரின் வித்துப் போற் காணப்படுகின்றான் என எண்ணி ஐயுறு கின்றான் (136). ஆசிரியர் இங்ஙனங் கொணர்ந்து இயைத்த இச்சிறான் இல்வழியும், அரசன் காசியப முனிவரை வணங்கச் சென்றக்கால் அவரால் அவன் சகுந்தலை ஆங்கிருக்குஞ் செய்தி அறிந்து அவளைத் தலைக்கூடுதல் போதருமாயினுந், தம் காதலன்பின் சேர்க்கையிற் பிறந்து, வேறு

பிரிந்த தம்மை மீண்டும் ஒருங்கு கூட்டும் அச்சிறானை இடைநிறுத்தி, அவ்வாற்றால் அரசற்குஞ் சகுந்தலைக்கும் முன்னிருந்த காதற் பேரன்பினைப் பின்னுந் தூய்தாகப் பெருகச் செய்து, சய்து, இரண்டு வாவியினை இடைநின்று இயைக்கும் ஒரு சிற்றாறு என அவனைப் பயன்படுத்தி, இந்நாடகக் கதை நிகழ்ச்சியினை ஈற்றில் அன்பு வெள்ளத்திற் றோய்த்துச் சுவை மிகுத்திருக்குந் திறம் உள்ளுந்தோறும் உள்ளத்தைக் களிப்பாற் றுளும்பச் செய்யுந் தன்மைத்தாய்த் திகழ்தல் காண்க.

அடிக்குறிப்புகள்

சு

1. Prof. Dowden in 'Shakspeare's Portraiture of Women' in his "Transcripts and Studies," pp.359-360 இதிலிருந்து மேலெடுத்துக்

காட்டிய பகுதியின் மூலத்திலுள்ள Juliet என்னும் பெயர்க்குமாறாகச் சகுந்தலை யென்னும் பெயரை இங்கு அமைத்தேம்.

2.

Much Ado About Nothing.

3.

Romeo And Juliet.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/133&oldid=1578262" இலிருந்து மீள்விக்கப்பட்டது