112
மறைமலையம் - 7
வகுப்பின் நிகழ்ச்சிக்கும் மூன்றாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இடையிலே பலநாட்கள் கழிந்தமை உய்த்துணரப்படும். படவே, சித்திரைத் திங்கள் கழிந்து, வைகாசித் திங்களின் றொடக்கத்திலே இம்மூன்றாம் வகுப்பின் நிகழ்ச்சி நடை பெற்றிருக்கலாமெனக் கருதுதல் இழுக்காகாது. என்னை? "வெம்மை மிகுந்த இந்நண்பகற் காலத்தைச் சகுந்தலை தன் தோழி மாரொடு, பச்சிளங் கொடிப் பந்தரால் மூடப்பெற்ற மாலினி யாற்றங் கரையிலேதான் கழிப்பள்” எனவும், “ஆ! புதுத் தென்றல் எப்போதும் உலாவப்பெறுகின்ற இவ்விடம் எவ்வளவு இனிதாயிருக்கின்றது!” எனவும் (45) அரசன் குறிப்பிடும் இளவேனிற்கால நிலைக்கு ஏற்றது, அவ்விள வேனிற்காலப் பிற்பாதியான வைகாசித் திங்களின் றொடக்கமே யாகலி னென்க.
அரசன் வைகாசித் திங்களின் றொடக்கத்து ஒரு நாளின் முற்பாதியில் முனிவர்கள் வேட்ட வேள்வியினைக் காத்து நின்றவன், அது முடிந்ததும் அம்முனிவர்களால் விடை தரப்பெற்றுத் தான் இளைப்பாறும் இடந் தெரிந்து செல்லக் கருதுகையிற், சகுந்தலையைக் காணும் விழைவு மீதூர்ந்து அவள் இருக்கும் டம் நாடிச் செல்லுங்காலம் அந்நாளின் பிற்பாதியேயாம். அப்பாதியிற் சகுந்தலையைத் தலைக்கூடி அவன் அவளை விட்டுப் பிரிந்த மாலைப் பொழுதோடு இந்நாடகத்தின் மூன்றாம் வகுப்பு முடிவு பெறுதல் காண்க.
ஏ
காரணம்
இங்ஙனஞ் சகுந்தலையைக் கூடிய அரசன் நீண்ட காலம் அக்கானகத்தில் இருந்தவனாகக் கருதுதற் கிடமில்லை. னன்றால், வேட்ட மேற்கொண்டு வ வந்த அவன், முனிவர்களின் விருப்பத்திற் கிணங்கி அவர்கள் வேட்ட வேள்விகள் முடியுந்தனையும் அவற்றைக் காத்து அங்கிருந்து, அவை முடிந்தபின் ஆண்டிருத்தற்கு வேறு உடையனல்ல னாகலினென்பது. அவ்வேள்விகளெல்லாம் பெரும்பாலும் முழு நிலாநாளின் முடிவனவாதலால், அரசன் சிறிதேறக் குறையப் பதினைந்து நாட்களே சகுந்தலையை மணந்து அக்கானகத்தில் இருந்தானாகற்பாலன். ஆகவே, அவன் வைகாசித் திங்களின் முழுநிலா நாளுக்குப் பின்னர்த் தன்நகர்க்கு மீண்டானென்று உய்த்துணர்தல் வேண்டும்.