பக்கம்:மறைமலையம் 7.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

113

னி. நான்காம் வகுப்பின் நிகழ்ச்சி நடைபெற்ற காலம் இன்னதென்பது ஆராயற்பாற்று. இந்நான்காம் வகுப்பினை யடுத்த ஐந்தாம் வகுப்பின்ககட் சகுந்தலை தன்னுடன் போந்தாருடன் சென்று அரசனெதிர் நிற்கின் றுழி, அவன் அவனை நோக்கிக் "கருக்கொண்ட குறிகள் நன்றாய்த் தோன்றும் ம்மாதர்க்கு நானே கணவனென்று ஐயுற்று இவரை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்ளலாம்? (84) என்று கூறும் உரையால், அப்போது சகுந்தலையின் வயிற்றகத்துள்ள கரு வெளியார்க்குப் புலனாகத் தக்கவளவு நன்கு வளர்ந் திருந்தமை அறியப்படும்.படவே, சகுந்தலை கணவனில்லத்திற்கு விடுக்கப் பட்ட காலஞ் சிறிதேறக்ககறைய எட்டாந்திங்கள் அல்லது தைத்திங்களிலே யாமென்பதும் இனிது பெறப்படும். அப்போது மழை காலங்கழிந்து முன்பனிக்காலம் நடைபெறா நின்றது; வெயிலின் வெப்பமுந் தோன்றாநின்றது; அதனாலே தான் சகுந்தலையை வழிவிடுக்குங்காற் காசியப முனிவரது தவத்தின் பெருமையால் அவ்வழியில் “அழிவெங் கதிர் வருத்தம் அடர்ந்த நிழன் மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக!” (67) என்று வானத்தின்கண்ணின் றெழுந்த தெய்வவொலி வாழ்த்தா நின்றது.

நடைபெறுவதாதலை,

-

இத்தன்மைத்தாகிய முன்பனிக் காலத்தின் ஒரு நாளிலே பெரும்பாலும் அது தைத்திங்களின் துவக்கமாயிருக்கலாம் இந்நான்காம் வகுப்பின்கட் சொல்லப்படுங் கதைநிகழ்ச்சி அப்போது காணப்படும் அக் கானகத்தின் இயற்கைத் தோற்றத்தைப் பிரியம்வதை கூறுவது காண்டும் உய்த்தறியலாம். சகுந்தலையின் பிரிவு ஆற்றாது அக்கானகமுந் துயருறு கின்றதென அவள் சொல்கின் றுழிப், "பழுத்த இலைகளை உதிர்க்கின்ற கொடிகள் கண்ணீர் சிந்தி அழுதலைப் போலிருக்கின்றன!” எனக் குறிப்பிடுகின்றாள். அங்ஙனம் பழுத்துப்போன இலைகளை மரஞ் செடி கொடிகள் உதிர்க்கின்ற காலம் முன்பனிக் காலமாகிய மார்கழியுந் தையுமே யாகலானும், பெற்றரில்லத்திருந்த மணமகளைக் கணவனில்லத் திற்குப் போக்குவது தைத்திங்களிலேயே நிகழ்தல் தொன்று தொட்ட வழக்கமாய்ப் போதரலானும் இந்நான்காம் வகுப்பின் நிகழ்ச்சி தைத்திங்கட்டொடக்கத்திலே தான் நடை பெறுகின்ற தெனக் கோடல் இழுக்காகாதென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/138&oldid=1578267" இலிருந்து மீள்விக்கப்பட்டது