பக்கம்:மறைமலையம் 7.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் - 7

இன்னும், அத் தைத்திங்களிலேயும் முழுநிலா நாளினை அடுத்த பின்னாற் அன்றே இந்நான்காம் வகுப்பின் நிகழ்ச்சி நடைபெறாநின்ற தென்பதற்குக், காசியபமுனிவரின் மாணாக்கன் ஒருவன் அன்றை விடியற்காலையில் மேல்பால் முழுமதி மறையுந் தறுவாயிலுங் கீழ்பால் இளஞாயிறு அப்போதுதான் தோன்றி விளங்கும் நிலையிலும் இருத்தல்

கண்டு,

“இலைகிளர் பூண்டுக்குத் தலைவ னாகிய சுடரொளி மதியங் குடபால் வரையின் ஒருபுறஞ் செல்லாநிற்ப ஒரு புறம்

வைகறை யென்னுங் கைவல் பாகனை முன்செல விடுத்துப் பொன்போன் ஞாயிறு கீழ்பா லெல்லையிற் கிளறு மன்றே." (94)

எனக் கூறுதலே சான்றாம்.

ஒரே நேரத்தில் அங்ஙனந் திங்களும் ஞாயிறும் மேல் கீழ்பால் எல்லைகளிற் றோன்றல் முழுநிலா நாளின் விடிய லிலன்றி ஏனைநாளில் நிகழாமையின், இந்நான்காம் வகுப்பின் நிகழ்ச்சி அந்நாளினை அடுத்த விடியற்காலையிற் றுவங்கி நண்பகல் வரையில் நிகழாநின்றமை தெற்றென ஓர்ந்து கொள்ளப்படும். இன்னும் இவ்வகுப்பின் நிகழ்ச்சி அந்நாளின் நண்பகலில் முடிதலைச், சார்ங்கவரன், “பகலவன் வானத்தின் மேற்பாகத்தில் இவர்ந்து விட்டான். அம்மையாரவர்கள் விரைதல் வேண்டும்" என்று கூறுமாற்றால் தெளிந்து கொள்க.

இனி, இந்நான்காம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் ஐந்தாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இடையிலே சிறிதேறக் குறைய மூன்று அல்லது நான்கு நாட்கள் கழிந்திருக்கலா மென்பது உய்த்தறியப் படும். துஷியந்தன் தன்நகர்க்குப் புறப்படும் பொருட்டுச் சகுந்தலைபால் விடை பெறுகின்றுழி, அவள் கண்களில் நீர்ததும்ப நின்று “பெருமான், எத்தனை நாட் சென்றபின் எனக்குச் செய்தி விடுப்பீர்?” என்று வினவ, அவன், தன்பெயர் செதுக்கப்பட்ட கணையாழியை க அவள் விரலிலிட்டு, “ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வோர் எழுத்தாக இக்கணையாழி யிலுள்ள என்பெயரை எண்ணிக் கொண்டு வா; யெழுத்திற்கு நீ எண்ண வரும் நாளில் என் கண்மணி! நின்னை

கடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/139&oldid=1578268" இலிருந்து மீள்விக்கப்பட்டது