பக்கம்:மறைமலையம் 7.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

7. காளிதாசர் வரலாறு

இனி, இச் சாகுந்தல நாடகத்தை இயற்றிய ஆசிரியர் காளிதாசரின் வரலாறு உண்மை வழுவாது வழங்கக் காண் கின்றிலேம். இவர் பிறந்தநாடு இன்னதென்பதும், இவரைப் பெற்றார் இன்னவரென்பதும், இவர் கலைபயின்று வளர்ந்த வாறும் பிறவும் இவை யென்பதும் ஒரு சிறிதளவாயினும் உண்மையாகப் புலப்படவில்லை. இவரைப் பற்றி யிப்போது வழங்குவனவெல்லாம் அவரவர் தத்தமக்கு வேண்டியவாறு கட்டி வழங்கும் வெறும் பொய்க் கதைகளேயன்றிப் பிறவல்ல. சமஸ்கிருத மொழி உலக வழக்கில் இல்லாமல் நூல் வழக்கின் மட்டும் பயின்று வந்த காரணத்தானே, அம்மொழிப் பயிற்சியுடையார் தத்தமக்குத் தோன்றிய வாறெல்லாம் பொய்யும் புளுகும் புனைந்து கட்டி, அதன்கட் பொய்ந்நூல்கள் பல எழுத இடம் பெற்றார். போச சரித்திரம் என்பது வெறும் பொய்க் கதையே யல்லாமல், அது காளிதாசரது வரலாற்றுண் மையினை உள்ளவாறே தெரிப்ப தொன்றன்று. ஏனென்றாற், போசன் என்னும் மன்னன் தாரை என்னும் நகரிற் கி.பி.1040 முதல் 1090 வரையில் அரசாண்டவ வ னன்பது கல்வெட்டினால் அறியக் கிடக்கின்றது.! மற்றுக், காளிதாசரோ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற் பாதியி லிருந்தவரென்பது ஆராய்ச்சியாற் பெறப்படுகின்றது. ஆகவே, போசனுக்கு அறுநூறு ஆண்டு முற்பட்டவராகிய காளிதாசரை, அவனோடு ஒருங்கிருந்தவராகக் கூறும் 'போச சரித்திரம்' வெறுங் கட்டுக் கதையேயாதல் தெளியப்படுகின்றதன்றோ?

ஒரு

ஆயினும், இவர் வடநாட்டிற் குடியேறி வைகிய தமிழ் மக்களில் இடையர் வகுப்பிற் பிறந்தவரென்பதும், இளமைப் பருவத்திலேயே கல்விப் பொருள் பெறுதற்கு இன்றியமையாது வேண்டிய செல்வப்பொருள் இல்லாமையால் இவர் வறியராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/144&oldid=1578273" இலிருந்து மீள்விக்கப்பட்டது