பக்கம்:மறைமலையம் 7.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

❖ LDMMLDMOED - 7❖

ஆடு மாடு மேய்த்துக்கொண் டிருந்தன ரென்பதும், அங்ஙனம் வறுமையால் வருந்தினுங் கல்வி பயிறலில் இவர் இடையறாத விழைவுகொண் டிருந்தமையால் இவர் தமக்கு எல்லாம் வல்ல

இறைவியின் அருளால் எங்ஙனமாகவோ கல்வியறிவு

வாய்ப்பதாயிற் றென்பதும், இவர் பிறந்தது தமிழக் குடியே யாயினுந் தமது காலத்தில் தாமிருந்த வடநாட்டில் மிக்கு வழங்கிய வடமொழியைப் பயின்று அதில் நல்லிசைப் புலவராய் வயங்கின ரென்பதும், இவர் தம்மிடத்து மிக்க அன்பு பூண்

ாழுகிய ஒரு காதற் பரத்தையைத் தமக்கு உரியவளாகக் கொண்டு வாழ்ந்தன ரென்பதும் போன்ற சில குறிப்புக்களே இவரைப்பற்றி அறியக்கிடந்தனவாகும்.

பா

இவர் இறைவியாகிய காளியின் அருளாற் கல்வியில் வல்லராகித் தீஞ்சுவைப் பாக்கள் இயற்றுந் திறம்பெற்று, அம்மைக்குத் தொண்டு பூண்டு ஒழுகினமையாற் போலும் இவர், “காளிதாசர்” என்னும் பெயர் பெறலாயினது முதலிற் கல்வி யறிவும் பாட்டுப் பாடும் வன்மையும் இல்லாதவராய் இருந்தார் இவர் பின்னர் இறைவ னருளால் அவ்விரண்டிலும் வல்லராய்த் திகழ்ந்த நிகழ்ச்சி இந்நாட்டிலே மட்டுமன்றி அயல் நாட்டிலும் நேர்ந்தமை வரலாற்று நூல்களால் அறியக் கிடக்கின்றது. இற்றைக்கு 1253 ஆண்டுகளுக்கு முன்னிருந்த காட்மன் என்னும் ஆங்கில நல்லிசைப் புலவர் இயற்றுதலில் வல்லராயதூஉம் இறைவன் திருவருளினாலே யாம். இவர் முதலில் ஒரு திருமடத்தில் ஊழியக்காரரா யிருந்தனர். அத்திருமடத்தில் திருவிழா நடக்குங் காலங்களில் அங்குள்ள முனிவரரும் பிறரும் யாழினை இயக்கி ஒருவர்பின் ஒருவராய் இறைவனைப் பாடிக்கொண்டு வருகையில் தமது முறை வரும்போது தமக்கு ஏதும் அங்ஙனம் பாடத் தெரியாமை பற்றிக் காட்மன் என்பவர் உளமும் உடலுங் குன்றித் தனியே போயிருப்பது வழக்கம். ஒருகால் அங்ஙனந் திருவிழா நடைபெறுகையில், அவர் அத்திருமடத்தினுள்ளே செல்லுதற்கு அஞ்சித், தாம் பார்த்து வருங் குதிரைக் கொட்டகையிற் போயிருந்தவர் அயர்ந்து உறங்கிவிட்டனர். அப்பொழுது அவரது கனவின்கண் ஒரு தெய்வந் தோன்றித் ‘திருமடத் தினுள்ளே திருவிழா நடைபெறு கையில் நீ ஏன் இங்கே படுத்துறங்குகின்றனை?” என்று வினவ, அவர் “ஐயனே, யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/145&oldid=1578274" இலிருந்து மீள்விக்கப்பட்டது