சாகுந்தல நாடக ஆராய்ச்சி
பட்டன வென்று கோடற்குச் சான்றேதும் இல்லையென்க.
66
123
அற்றேல், இத்துணைப் பல நூல்கள் அவரியற்றியனவாக வழங்கப்பட்ட லாயினது என்னை யெனிற்; காளிதாசர்க்குப் பின் அவரது பெயர் பூண்ட புலவர் பலர் இருந்தமையின், அவர்களியற்றிய நூல்களெல்லாம் முதற் காளிதாசர்க்கு உரியனவாக மயங்கவைத்துப் பின்னுள்ளாரால் வழங்கப்பட லாயின. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னிருந்த இளைய இராசசேகரன் என்பான் தான் இயற்றிய செய்யுள் ஒன்றில், 'காளிதாச த்ரயீகிமு” எனக் கூறுதல்கொண்டு, அவன் அறிந்த காளிதாசர் மூவரென்பது பெறப்படா நிற்கின்றது. இவ் இராசசேகரன் காலத்திற்குப் பின் இன்னும் எத்தனை காளிதாசர்கள் இருந்தனரோ! இனையரெல்லாம் பிற் பிற் காலத்தே இயற்றிய எளிய நூல்களின் கால அளவைகளை ஆராய்ந்துணரும் வரலாற்று நூலறிவு வாய்ப்பப்பெறாதார், அவை தம்மை யெல்லாம் முதற் காளிதாசர் இயற்றிய நூல்களோடு ஒருங்குவைத்தெண்ணிப் பிழைபடலாயினாரென விடுக்க.
1.
அடிக்குறிப்பு
A. Weber's The History of Indian Literature, pp.201,202