124
8.காளிதாசரது காலம்
இனிக், காளிதாசர் இருந்த காலம் இன்னதென்பதனை ஆராய்ந்து காட்டுவாம். இற்றைக்கு ஐம்பது ஆண்டுகள் முன்னரே காளிதாசரது காலத்தை ஆராய்ந்த ஆசிரியர் மாக்ஸ்மூலர் அது கி.பி. நான்கல்லது ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகாதென்று முடித்துக் கூறினார்.' அவர் கண்ட அம் முடிபே, பின் அதனை மேலும் மேலும் ஆராய்ந்த ஆசிரியர் கண்ட முடிபுமாயிருக்கின்றது.
ல்
கி.பி. 634ஆம் ஆண்டிற் செதுக்கப்பட்ட ஐகோல் கல்வெட்டு ஒன்றிற் காளிதாசர், சுபந்து, பாரவி, குணாட்டியர் என்னும் ஆசிரியர் நால்வரும் ஒருங்குசேர்த்து உரைக்கப்பட் டிருக்கின்றனர். இவருட் பாரவி என்னும் புலவர் இயற்றிய கிராதார்ச்சுநீயம் என்னும் நூலிற் பதினைந்து காண்டங்களுக்கு உரையெழுதிய அவிநீதர் என்பார் கி.பி. 470ஆம் ஆண்டி இருந்தாரென நாயவர்மரது கருநாடக பாஷா பாஷணத்தில் தெற்றென விளக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாற்றாற் காளிதாசரும் பாரவியுங் கி.பி. நான்காம் நூற்றாண்டிலாதல் ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் இருந்தாராகல் வேண்டுமென்பது நன்கு பெறப்படாநிற்கும்.
2
இனி, விக்கிரமாதித்த வேந்தனது அவைக்களத்தே தன்வந்தரி, க்ஷபணகன், அமரசிங்கன், சங்கு, வேதாள பட்டன், கடகர்ப்பரன், காளிதாசன், வராகமிகிரன், வரருசி என்னும் ஒன்பது மணிகளும் விளங்கினரென வடமொழிச் செய்யுள் ஒன்று குறிப்பிடுகின்றது. இச்செய்யுள், இற்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே அஃதாவது கி.பி. பதினாறாம் நூற்றாண்டின்கண் இயற்றப்பட்ட நூல் ஒன்றிலேமட்டுங் காணப்படுகின்றதெனவும், வான் நூலாசிரியரான வராகமிகிரர் அவந்திமாநகரிற் பிறந்து கி.பி. 587ஆம் ஆண்டில் இறந்து