பக்கம்:மறைமலையம் 7.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் 7

மஹாகாலர்' எனும் பெயரால் வழிபடப்படுஞ் சிவபிரான் றிருக்கோயிலைக் காளிதாசர் தாமியற்றிய 'மேகதூதத்’ திற் (31) குறிப்பிடுதல்கொண்டு, அவர் அந்நகரத்தில் இருந்தாரெனவோ, அல்லது அஃது அவ்வரசற்குஞ் சிவபிராற்கும் உரியவாந் தலைமையும் விழுப்பமும் உடைமை கண்டு அது தேற்றுதற்கு வேட்கைமீதூர்ந்து அது செய்தாரெனவோ கோடல் இழுக்காது.

இங்ஙனம் அவர் விக்கிரம வேந்தனது அவைக் களத்தே யிருந்தமை உய்த்தறியப்படவே, அவரது காலமும் அவ்வரசனது காலமாகவே அறியப்படாநிற்கும். அற்றேல், அவ்வேந்தனிருந்த காலந்தான் யாதோவெனிற் காட்டுதும் விக்கிரமாதித்தியன் என்பது அரசர் பலரும் பலகால் மேற்கொண்ட ஒரு சிறப்புப் பெயராகக் காணப்படுகின்றதேயன்றி, அஃது ஒருவற்கேயுரிய இயற் பெயராகக் காணப்படுகின்றிலது. முதலாஞ் சந்திரகுப்த மன்னனும், இரண்டாஞ் சந்திரகுப்த வேந்தனும், ஸ்கந்த குப்தனுஞ், சாளுக்கிய அரசர் பலரும் விக்கிரமாதித்தியன் எனும் பெயரைச் சிறப்பாகப் புனைந்திருந்தனரென்பது விந்தியதேய வரலாற்றினால் நன்கறியக்கிடக்கின்றது5 என்றாலும், வெற்றியிற்சிறந்த மன்னர் மன்னனாய் விளங்கிய இரண்

இவ்

ாஞ் சந்திரகுப்த வேந்தனுக்கு அப்பெயர் உரிமை யாயினாற்போல, ஏனை மன்னர்க்கு அஃது அஃது உரிமை யாயிற்றில்லை யென்று இந்தியவரலாற்று நூலாசிரிய ரெல்லாரும் ஒருங்கொத்து ஒருமுகமாக நுவலா நிற்கின்றனர். வென்றிவேந்தனாய் ஏனையரசரையெல்லாந் தன்கீழ்ப்படுத்த சிறப்பேயன்றிக், கல்வியின் மிக்க புலவர் குழாத்தையுந் தன் அவையின் கண்ணே வைத்துக் கலை வளம்பெருக்கிய தனிப்பெருஞ் சிறப்பும் இரண்டாஞ் சந்திரகுப்தனாகிய விக்கிரமாதித்த வேந்தனுக்கே உரித்தாய்த் திகழ்கின்றது. அவ்வேந்தன் வெட்டுவித்த கல்வெட்டுக்களும், அவன் வ வழங்குவித்த காசுகளும் எல்லாங் கி.பி.400ஆம் ஆண்டு முதல் 413ஆம் ஆண்டுவரையிற் சென்ற நாட்பெயர்களே தங்கட் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்களெல்லாங், காளிதாசருடைய நூல்களைப்போலவே வைதர்ப்பநெறி” பற்றி யியற்றப்பட்டுள்ளன வென்று இவ் வியல்புகளை நுணுகியாராய்ந்த ஆசிரியரொருவர் முடிவு

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/151&oldid=1578280" இலிருந்து மீள்விக்கப்பட்டது