சாகுந்தல நாடக ஆராய்ச்சி
6
127
கட்டிச் சொல்கின்றார். இவ்வாற்றால் ஆசிரியர் காளிதாசர், இரண்ட ாஞ் சந்திரகுப்தனாகிய விக்கிரமாதித்தன் வென்றி வேந்தனாய் விளங்கிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலே தான் இருந்தமை நன்கு துணியப்படுமென்பது.
அற்றேற், கி.பி. 507ஆம் ஆண்டிற் பிறந்து 587ஆம் ஆண்டில் இறந்த வான் நூலாசிரியரான வராகமிகிரர், ஆசிரியர் காளிதாசரோடு ஒருங்கிருந்தாரெனக் கூறும் அவ்வடமொழிச் செய்யுட் குறிப்பு என்னாவதெனிற் கூறுதும். இரண்டாஞ் சந்திரகுப்த விக்கிரமாதித்தனைப் போலவே,
அவன் மகன் குமாரகுப்தனுங், குமாரகுப்தன் மகன்
ஸ்கந்தகுப்தனும் வென்றிவேந்தராய் விளங்கித், தாம் வட மொழிப் புலமையில் வல்லுநராயிருந்ததொடு வடமொழி வல்ல புலவர்களையுந் தம் அவையில் ஒருங்குவைத்து வடமொழிக் கல்வியை வளர்த்து வந்தனரென்பது வரலாற்று நூலாசிரியரால் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே, விக்கிரமாதித்தனால் நிறுவப்பட்ட வடமொழிப் புலவரவையிற் காளிதாசரும், அவன்றன் L மகனாலும் பேரனாலுந் தொடர்ந்து ஓம்பப்பட்ட அப்புலவரவையில் வராகமிகிரர் முதலான ஏனைப்புலவரும் வெவ்வேறுகாலத் திருந்தனராகவும், வரலாற்று நூலறிவு வாயாத பழைய வடமொழிப் புலவர் எவரோ ஒருவர் அப்புலவர்கள் இருந்த காலவேற்றுமை ஆராய்ந்து பாராது, அவரெல்லாம் அவ் வவையில் இருந்த ஒன்றே பற்றி அவரையெல்லாம் ஒரே காலத்தவராகப் பிழைபட வைத்து அவ்விடுதிச் செய்யுளை இயற்றினராகற்பாலார். மேலும், விக்கிரமாதித்த வேந்தன்றன் பேரனான ஸ்கந்தகுப்தன் தன் பாட்டனுக்குரிய “விக்கிர மாதித்தன்” என்னுஞ் சிறப்புப் பெயரைத் தானும் புனைந்து கொண்டானாகலிற், பாட்டன் காலத்திருந்த புலவர்களையும், பேரன் காலத்தும் அவற்குப்பின் அரசுபுரிந்த அரசுபுரிந்த ஏனைக் குப்தவேந்தர்காலத்தும் இருந்த புலவர்களையும் எல்லாம், அச்சிறப்புப் பெயரொற்றுமை பற்றி ஒருகாலத் தொருங்கிருந்த வராகப் பிழைபடுத் துரைத்தார் அவ்விடுதிச் செய்யுளை யாக்கியோரெனக் கோடலே பொருத்தமாமென விடுக்க.