பக்கம்:மறைமலையம் 7.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் - 7

இனிச், சுபந்து என்னும் புலவர், தாம் இயற்றிய வாசவதத்தை என்னுங் கதைநூலிற்போந்த செய்யுள் ஒன்றில், விக்கிரமாதித்த வேந்தன் தமது காலத்தை யடுத்துத் துஞ்சினானென்பது போதர,

66

'இப்போது விக்கிரமாதித்தியன் தன் புகழை நிறுவித் தான் மறைந்தேகினான், L அரசியல் மாட்சியும் மறைந்தேகியது, புதிய ஆசிரியர்கள் இம் மண்மிசைத் தோன்றி தோன்றி ஒருவரை யொருவர் தாக்குகின்றனர். வெள்ளிய நாரைப் பறவைகள் மறைந்தேகப் பெற்றதும், கொக்குகள் விளை யாடப் பெறாததும், ஞாயிறு படூஉம் மாலைக் காலத்தே பொன்னிறப் பறவைகள் உலாவப் பெறாததுமான நீரில்லா ஓர் ஏரியைப்போல அவ்வேந்தனும் லனாயினனே!”

என்று கூறுதலின், அப்புலவர் அவ்விக்கிரமவேந்தனை யடுத்து அவற்குப் பின்னிருந்தமை தெளியப்படும். ஆசிரியர் காளிதாசரும் அவ்வேந்தனுக்குப்பின் அவன்றன் மகனான குமாரகுப்த மன்னன் காலத்தும்

இருந்தனரென்பது,

அவரியற்றிய குமாரசம்பவம் என்னும் அரும்பெருங் காப்பியம் அவ்வரசன் பெயரையும் நினைவுகூர்விக்கும் ஒரு குறியாக அமைத்து அவரால் இயற்றப்பட்டிருக்குமாற்றால் உய்த்தறியப் படுமென்க.

இனி, இக்குமாரகுப்த மன்னன், கௌதமசாக்கிய புத்தருக்கு, அலகபாத்து மாகாணத்தைச் சேர்ந்த மங்குவாரில் ஓர் உருவச்சிலை அமைத்துவைத்த ஞான்று. அச்சிலையின்கீழ்ப் பொறிப்பித்த கல்வெட்டுக் கி.பி. 448ஆம் ஆண்டின் கண் அச்சிலை ஆங்கு வைக்கப்பட்டமை குறித்து நுவல்கின்றது. இதனானுங் காளிதாசர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியில் விக்கிரவேந்தன் காலத்தும் அவன்றன் மகன் குமாரகுப்த மன்னன் காலத்துந் தொடர்ந்திருந்தமை நன்கு தெளியப்படும்.

மேலே காட்டிய சுபந்து என்னும் புலவரும் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்தமை துணியப்படுத்தலானும், ஆசிரியர் காளிதாசர் இயற்றிய நூல்களின் சொற்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/153&oldid=1578282" இலிருந்து மீள்விக்கப்பட்டது