சாகுந்தல நாடக ஆராய்ச்சி
129
நயங்களுஞ் சுபந்து என்னும் புலவர் இயற்றிய நூற் சொற் பொருள் நயங்களும் இருவர்க்கும் பொதுவாகக் காணப் படுதலானுங், காளிதாசர் சுபந்து என்னும் புலவர் இருவருங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்தமை ஐயுறவின்றித் துணியற்பாலதா மென்க.
ா
இனி, ஆசிரியர் காளிதாசர் தாம் இயற்றிய நூல்களிற் சிவபிரானையும் அவர்தந் திருப்புதல்வரான குமாரக் கடவுளையும் வழுத்துஞ் சைவசமயத்தவரா யிருந்தும், அவர் தம்முடைய நூல்களில் ஓரிடத்தாயினும் யானைமுகக் கடவுளாகிய விநாயகரைக் குறிப்பாலாயினும் வெளிப்படை யாலாயினுங் கூறக் காண்கிலேம். ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து வடநூல் தமிழ் நூல்கள் இயற்றிய சைவசமய ஆசிரியர்கள் எல்லாருந் தம் நூன்முகத்தே விநாயகக் கடவுளுக்கு வணக்கங் கூறுதலைத் திறம்பா ஒழுகலாறாக் காண்டு வருகின்றார். சிவபிராற்கன்றி வேறு எத்தெய்வத் திற்கும் வணக்கமுந் தனிப்பதிகமும் ஓதாத சைவ சமயாசிரியர் களான திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவருந் தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களில் விநாயகக் கடவுளைக் குறிப்பிட்டுக் கிளந்து கூறியிருக்கின்றனர். மற்று, மாணிக்க வாசகரோ தாம் அருளிச்செய்த 'திருவாசகந்' 'திருக் கோவையார்’ என்னும் நூல்களில், விநாயகரைச் சிறிதுங் குறிப்பிடக் காண்கிலேம்; அங்ஙனமே, காளிதாசர் தாம் இயற்றிய நூல்களிலும் இவ்விருவர்க்கும் முந்தியகாலத்திருந்த வடமொழி தென் மொழிப் புலவர்களுந் தாம் இயற்றிய நூல்களிலும் யாண்டும் விநாயகக் கடவுளைப்பற்றிச் சிறிதுமே கூறக் காண்கிலேம். விநாயகக்கடவுள் வழிபாடு கி.பி. ஐந்தாம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிலோ அதற்குச் சிறிது பின்னரோ உண்டாயதன்றி, அதற்கு முன் அஃதிருந்தல்லாமையினை, யாம் இயற்றிய மாணிக்கவாசகர் காலம் என்னும் பெருநூலின் 869 முதல் 871ஆம் பக்கங்களில் அகப்புறச் சான்றுகள் கொண்டு நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம். அதன் விரிவை அங்கே கண்டுகொள்க. காளிதாசரும் மாணிக்கவாசகரும் விநாயகக் கடவுள் வழிபாடு உண்டாதற்குமுன் முறையே ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் மூன்றாம் நூற்றாண் டி பிற்பாதியிலும் இருந்தமையாற்றான், சைவசமய ஆசிரியராகிய
வ
ன்