பக்கம்:மறைமலையம் 7.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் 7

அவ்விருவர் நூலிலும் யானைமுகமுடைய பிள்ளையாரைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாத தாயிற்றென்றும், மற்று அவ்வைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் வந்த சைவசமய ஆசிரியர் எல்லார் நூல்களிலும் பிள்ளையார் வணக்கமும் அவரைப்பற்றிய குறிப்புங் காணப்படலாயினது யானைமுகக் கடவுள் வழிபாடு இந்நாட்டின்கட்டோன்றி அஃது யாண்டும் பரவியபின் அவர் எல்லாரும் இருந்தமையினாற்றா னென்றும் பகுத்துணர்ந்துகொள்ளல் வேண்டும்.

அற்றேலஃதாக, கிறித்து பிறப்பதற்குமுன் 56 ஆம் ஆண்டிற்றோன்றி இன்றுகாறும் வழங்கிவராநின் விக் கிரமசகம்' என்பது விக்கிரமாதித்த வேந்தனாற் றோற்றுவித்து வழங்கப்படுவதொன்றாகக் காணப்படுதலின், அவ்வேந்தனும் அவனது அவைக்களத்திருந்த காளிதாசரும் இற்றைக்குச் சிறிதேறக்குறைய இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தாரெனக் கோடலே வாய்வ தாகுமன்றிக், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதயில் அவரிருந்தாரெனக் கோடல் வாயாதென ஒருசாரார் கூறுத லென்னையெனின்; அவர் கூற்றுப் பொருந்தாமை காட்டுவாம். விக்கிரமசகம் என்பது முதலில் விக்கிரமாதித்த வேந்தனாற் றோற்றுவிக்கப்பட்ட தொன்றன்று, அது மாளுவக்குடியினரில் ஒரு பகுதியினர் ஒரு குழுவாகக் கூடித் தம்மவர் முன்னேற்றத் திற்கு இன்றியமையா முயற்சிகள் சில செய்யத் துவங்கியதற்கு நினைவுக்குறியாக, அவர்கள் அம்முயற்சி துவங்கிய நாளிலிருந்து அதனையும் வழங்கத் துவங்கினர்; அப்போது அது மா ளுவசகம்" என்னும் என்னும் பெயரால் வழங்கப்பெற்று

66

வந்தது. பின்னர் விக்கிரமாதித்த வேந்தன் தான் செங்கோல் ஓச்சிய ஞான்று, அம்மாளுவக் குடியினரின் சிறந்த அறிவு முயற்சிகளைக் கண்டு வியந்து, இவ்விந்திய நாட்டில் மிகச் சிறந்த ஒரு வகுப்பினராம் வரிசையினை அவர்கட்கு அளித்தனன். அங்ஙனம் அவன் தமக்குச் செய்த நன்றியை நினைந்து, அம்மாளுவருந் தாம் வழங்கி வந்த மாளுவசகத்தை அவ்வேந்தன் பெயர் தொடுத்து “விக்கிரமசகம்” எனப் பின்னர் வழங்கிவரலாயினர். இவ்வரும் பெறலுண்மை ஓர் ஆங்கில ஆசிரியர் (Fleet) கண்டு பிடித்த ஓர் அரிய கல்வெட்டிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/155&oldid=1578284" இலிருந்து மீள்விக்கப்பட்டது