சாகுந்தல நாடக ஆராய்ச்சி
66
131
புலப்படுவதாயிற்று. இக்கல்வெட்டுச், சிந்திய நாட்டில் தசபுரம் என்னும் ஊரின் கண் உள்ள சிவபிரான் திருக்கோயிலின் முகத்தே ஒரு கருங்கற் பலகைமேற் பொறிக்கப் பட்டிருக்கின்றது. அக்கல்வெட்டினால் அறியக் கிடப்பது இது: கூர்ச்சர நாட்டிலிருந்து தசபுரத்திற்குப் போந்து ஆண்டுக் குடியேறிய பட்டு நூற்காரரில் ஒரு வகுப்பார் ஒரு குழுவினைக் கூட்டினர். குமாரகுப்தன் இந்நிலவுலக மெல்லாம் ஒருங்கே ஆட்சி செலுத்திய அஞ்ஞான்று, சிற்றரசனான விசுவவர்மன் என்பானுக்கு மகனாக பந்துவர்மன் என்பான் தசபுரத்தில் ஆளுகை செய்துவந்தான். அப்போது ஒரு பட்டு நூற்காரக் கூட்டத்தார் அங்கே ஒரு திருக்கோயில் அமைப்பித்தனர். அக்கோயில், இடியொலி இனிமையாகத் தோன்றும் பருவத்தே மாளுவக் குடியினரின் சகம் உண்டாகி 493 ஆண்டுகள் கடந்த காலத்தே” கட்டி முடிக்கப்பட்டது.8 என நுவலும் இக் கல்வெட்டினாற், கி.மு. 56ஆம் ஆண்டில் உண் ான சகம் மாளுவக் குடியினரால் உண்டாக்கப்பட்டு மாளுவசகம்' என்னும் பெயர்த்தாய் 450 ஆண்டுகள் வழங்கப்பட்டுவந்து, பின்னர் விக்கிரமாதித்த வேந்தன் அம்மாளுவக் குடியினர்க்குச் செய்த பெருஞ் சிறப்பினை நினைந்த அம்மாளுவரால் அவர் தமக்குரிய அச் சகம் விக்கிரமவேந்தனுக்குரிய தொன்றாகப் பின்னர் மாற்றி வைத்து வழங்கப்படலானமை இனிது புலனாதல் காண்க. ஆகவே, விக்கிரமசகம் எனப் பிற்றைஞான்று அது வழங்கலானமை ஒன்றே கொண்டு, அதனை ஆக்கியோன் விக்கிரமவேந்தனே யெனவும், அவன் அச் சகந் தோன்றிய கி.மு.56ஆம் ஆண்டி லிருந்தானெனவும், அதனால் அவனது அவைக்களத் திருந்த ஆசிரியர் காளிதாசருங் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தவரே யாகற்பாலாரெனவுங் கோடல் பெரியதொரு தலை தடுமாற்றமாய் முடிதல் கண்டு காள்க. அஃதவ்வா
றொழியவே, விக்கிரம வேந்தனும் அவன்றன் மகன் குமார குப்தனும் வென்றி வேந்தராய் விளங்கிய காலங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியேயாதல் வேண்டுமென்பது கல்வெட்டுக்களாலும் ஏனை அகச்சான்று புறச் சான்று களாலும் நன்கு தெளியக் கிடத்தலின், அவ்வேந்தர் இருவர்