133
ய
9. காளிதாசரது நல்லிசைப் புலமை
L
இனி, உலகியற்பொருள் உயிர்ப்பொருள் என்னும் இரண்டின் றன்மைகளையும், அவை யொன்றோடொன்று பிணைந்து நிற்கும் முறையிற் பின்னவற்றின்பாற் றோன்றும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளையும், அவ்வியற்பொருள் உயிர்ப் பொருள்கள் சிற்சிலவற்றின்மேல் வைத்து, ஒரு கண்ணாடியிற் காட்டுமாப்போல், இவ்வரும்பெரு நாடகத்திற்காட்டும் ஆசிரியர் காளிதாசரது நல்லிசைப் புலமை இருவகையில் ஆராய்ந்து உரைக்கற்பாற்று. உலகியற் பொருள்களில் வான் ஒன்றும் ஒழிய, ஒழிந்த வளி தீ நீர் நிலம் என்னும் நான்கும் அவற்றின் பயன்களும் நம்முடைய புலன்களுக்குப் புலனாகும் புறப்பொருள்களாகும்; மற்றை, ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாக உடைய சிற்றுயிர்களும் ஆறறிவுடைய மக்களுமோ உடம்பள வானன்றி உயிரளவால் நம்முடைய ஐம்புலன்களுக்கும் புலப்படாமல் நமதுளத்தின் உய்த்துணர்ச்சி ஒன்றற்கே புலனாகுந் தன்மையுடைமையால் அவ்விரு கூற்றுயிர்களும் அகப்பொருள்களே யாகும். தமிழ் நூன்முறையிற் பாகு பாடுற்றுக் கிடக்கும் இவ்விருவகைப் பொருளியல்புகளுட் புறப்பொருளியல்பு நிகழ்ச்சி சிறிதாகவும் ஏனையகப் பொருளியல்பு நிகழ்ச்சி பெரிதாகவுங் காட்டுவதே நாடகக் காப்பிய இலக்கணமாகும். மற்றுப், புறப்பொருளியல்பை மிகுத்தாதல் அன்றி அகப்பொருளியல்பின் அளவோடு ஒப்பவைத்தாதல் நுவல்வது ஏனைச் சிறுகாப்பிய பெருங் காப்பிய இலக்கணமாவதோடு, வையல்லாத தனிப் பாட்டுக்களின் இலக்கணமும் ஆகும். இங்ஙனமாக நாடகக் காப்பிய இலக்கணமும் ஏனைக் காப்பிய இலக்கணமுந் தம்முட் சில பல வேறுபாடுகள் உடையவாம் நுட்பத்தினை, ஆசிரியர் காளிதாசர் இச் சாகுந்தல நாடக யாக்குங்கால்
நூல்