பக்கம்:மறைமலையம் 7.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

135

வல்லால், விரைந்த செலவினையுடைய நாடக நிகழ்ச்சிக் கிடையே விரவுதல் பொருந்தாதென்றுங் கடைப்பிடிக்க, சாகுந்தல நாடகம் யாக்கும்ஞான்று ஆசிரியர் காளிதாசர் முதிர்ந்த புலமையும் நாடக நூல் நுட்பங்கள் நன்குணர்ந்த உணர்வும் வாய்க்கப் பெற்றமையால் நாடக நிகழ்ச்சியில் வருதற்குரிய வல்லாதவைகள் பெரும்பாலுந் அதன்கட் புகுதற்கு இடந்தராமலே விழிப்பாயிருந்தனரென் றுணர்ந்துகொள்ளல் வேண்டும்.

அற்றாயின், அவர் அவ்வாறாம் வகுப்பு நிகழ்ச்சிகளிற் பெரும்பாலன கதை நிகழ்ச்சிக்குச் சிறிதுந் தொடர்பில்லனவா யிருப்பவும், அவையிற்றை விடாது முழுதுங் கூறிய தென்னையெனின்; அரசனால் விலக்குண்டு சகுந்தலை மறைந்துபோயதைக் கிளக்கும் ஐந்தாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும், மீண்டும் அரசன் சகுந்தலையைத் தலைக் கூடிய வரலாறு நுவலும் ஆறாம் வகுப்பின் நிகழ்ச்சிக்கும் இடையே ஐந்தாண்டுகள் கழிந்தனவாதல் வேண்டுமென்பதை மேலே (115 ஆம் பக்கத்தில்) விளக்கிக் காட்டியிருக்கின்றேம். ஓர் இரவின் ஒரு பாதிக்குள் இச் சாகுந்தல நாடகத்தினை நாடக அரங்கின் கண் நடாத்திக் காட்டலுறும் நாடக ஆசிரியன், சகுந்தலையை விலக்கிய அரசன் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் அவளைத் தலைக்கூடுங் காறும் எந்நிலையிலிருந்தா னென்பதை யறிய நாடகங் காண்பாரெல்லார்க்கும் விழைவு மீதூர்ந்து நிற்கு மாகலின், அதனையுணர்ந்து அது தீர்த்தற்கு அவ்வைந்தாண்டு நிகழ்ச்சிகளிற் கதையொடு தொடர் புள்ளனவாய் விழுமியவாய் உள்ள சிலவற்றையேனும் எடுத்து அவன் ஆண்டுச் சிறிது நேரமாயினுங் காட்டற்பாலனாவன். இம்முறை வழுவாமலே ஈண்டு இவ்வாறாம் வகுப்பிலும் ஆசிரியன், சகுந்தலையைப் பிரிந்து ஆற்றானாகிய துஷியந்த மன்னன் தனது பொழிலின் கண் இருந்த நிலையைக் காப்பியச் சுவை துளும்பக் கூறினாரென்க. எனவே, இது கூறியது குற்றமாகாது வனப்பு மிக்கிருத்தலுந் தானே விளங்கும்.

இனி, னி, ஆசிரியர் இந்நாடகத்தைத் துவங்கும்போதே, பின்னே காட்டப்படுங் காதலின்ப வொழுக்கமாகிய அகப் பொருளுக்கு ஏற்ற புறப்பொருள் களாகிய வேனிற்காலத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/160&oldid=1578289" இலிருந்து மீள்விக்கப்பட்டது