பக்கம்:மறைமலையம் 7.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் 7

அதன்கண் வீசுந் தென்றற்காற்றையும், அது பாதிரிமுகிழ்களில் அளைந்து வந்து பரப்பும் நறுமணத்தையும், அக்காலத்தே னிமை பயக்குந் தண்ணீர் முழுக்கையும், அடர்ந்த மர நிழல்களில் அப்போது வரும் இனிய அயர்ந்த துயிலையுஞ் சூத்திரதாரன் வாயிலாகப் புலப்படுத்துதலும், அரசன் கானகத்திற் புகுந்து சகுந்தலையை மணக்கப் போவதனைச் சேய்மையிலிருந்து போதரும் வண்டு மலர் முகிழை முத்தமிடுதலில் வைத்து நடியின் வாயிலாகக் குறிப்பிடுதலுங்

காண்க.

னி, அரசனாற் பின்றொடரப்பட்ட மான் தன்னைப் பின்றொடரும் அரசனைத் திரும்பித் திரும்பி நோக்கிய படியாய் ஓடுதலையும், அச்சத்தால் அது கழுத்தைச் சுருக்கிக்கொண்டு தன் பின்றொடைகளைப் பரப்புதலையும்; அரசன் தன் தேரின் மிக விரைந்த ஓட்டத்தைத் தெரிவிக்கும்பொருட்டுத் தொலைவிற் சிறியவாய்க் காணப்பட்ட பொருள்கள் சடுதியிற் பெரியவராய்த் தோன்றுதல் குறித்தலையுங்; கண்ணுவ முனிவரது பாழிக்குள் நுழைந்த மன்னன் ஆண்டுக் கண்டு ரைக்கும் முகத்தாற் பேட்டிளங் கிளிகள் மரப்பொந்துகளின் அகத்தே யிருத்தலின் மரங்களின் கீழ்க் காட்டுத் தானியங்கள் இறைந்து கிடத்தலையும், இங்குதிப்பழங்களை நசுக்கின கற்கள் நெய்ப்பற்றினால் மினுமினுவென்று மிளிர்தலையும், அங்கு மான் கன்றுகள் அச்சமின்றி உலவுதலையும், நீர்நிலைகளுக்குப் போம்வழிகளில் மரவுரியாடைகளின் ஓரங்களினின்று சொட்டின நீர்க்குறி வரிவரியாயிருத்தலையும், நீரோடுங் கால்வாய்களில் தென்றற் காற்றால் எழுப்பப்பட்ட சிற்றலைகள் மரங்களின் வேர்க் கற்றைகளை அலைசு தலையும்; மெல்லிய காற்றால் அசையும் மாந்துளிர்கள் சகுந்தலையைக் கைவிரல்களால் அழைப்பது போற் றோன்றுதலையும், புதிய பச்சிளந்தழைகள் பொதிந்த தேமா மரத்தைப் பின்னிக் கொண்டு மல்லிகைக் கொடிகள் வெண்மலர் துதைந்து விளங்குதலையும், ஏழிலைப்பாலை மரத்தின்கீழ் எக்கர்மணல் இருத்தலையுங்; குதிரைக் குளம்படிகளாற் கிளப்பப்பட்ட புழுதியானது சாய்ங்கால வெயில் வெளிச்சம்பட்டுப் பசியநிறம் பெறுதலையும், அது மரங்களில் தொங்கவிட்டிருக்கும் ஈர மரவுரியாடைகளின்மேல் வந்து படிதலையும், வேட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/161&oldid=1578290" இலிருந்து மீள்விக்கப்பட்டது