சாகுந்தல நாடக ஆராய்ச்சி
அதன்கட்டனிவிருப்புண்டென்பது விளங்கா நிற்கின்றது.
னி,
இவர் புராணக்
139
கதைகளை ஆங்காங்குக் கொணர்ந்து இசைவிக்கின்றமையின், இவர்க்கு அக் கதைகளின் பால் நம்பிக்கை யுளதென்பதுந் தெளியப்படும். திரிசங்கு மன்னன் துறக்கவுலகத்திலும் இடம் பெறாமல் இம் மண்ணுலகத்திலும் இருந்து வாழாமல் இரண்டிற்கும் இடை பட்ட வான்வெளியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தங்குமாறு விசுவாமித்திரர் பணித்த கதையினை விதூஷகன் வாயிலாக இவர் அறியவைத்தல் காண்க.
டைப்
இங்ஙனமே, தக்கன் சிவபிரானை ஒதுக்கி ஆற்றிய வேள்வி, அப்பெருமான்றன் சினத்தீயிற்றோன்றிய வீரபத்திர ரால் அழிக்கப்பட்டு ஒழிய, அவ் வேள்விக்களத்தில் வந்திருந்த தேவர்கள் அனைவரும் அவராற் பலவகையால் ஒறுக்கப் பட்டுப் பலமுகமாய் ஓட, அவ் வேள்வியின் அகத்துநின்ற தெய்வமும் வெருக்கொண்டு ஒரு மான் வடிவெடுத்து வானூடு ஓடா நின்றது. அதுகண்ட வீரபத்திரர் அந்த மானைப் பின்றொடர்ந்து சென்றாரென வாயு புராணமும் மாபாரதமும் நுவலுங் கதைக் குறிப்பினையும், இவர் வர் துஷியந்தன் ஒரு மானைப் பின் றொடர்ந்து செல்லுதற்கு உவமையாக எடுத்துரைத்தல் காண்க.
யுடை
ா
யதான
இன்னும், ஆயிரம் படமுடிகளை ஆதிசேடன் என்னும் பாம்பு இந் நிலைவுலகத்தைத் தன் தலைமேல் தாங்கி நிற்கும் என்னுங் கதைக்குறிப்பை, அரசன் எக்காலும் அரசியற் கடமைகள் தாங்கிநிற்றலைக் கூறுங்கால் உவமையாக எடுத்துக்காட்டுதல் காண்க (பக்கம் 83).
இன்னும், ஊருவர் என்னும் முனிவர் கடுந் தவத்தின் மிக்க ஆற்றலுடையராய்த் திகழ்தல்கண்ட தேவர்கள், அவர்பால் ஆற்றன்மிக்க புதல்வர்களைப் பெறுவான் வேண்ட, அவரும் அதற்கு ஒருப்பட்டுத், தமது தொடையினின்றுந் தோற்றுவித்த தீக்கடவுள் தனக்குத் தக்கதோர் உணவு கேட்க, நான்முகன் அதனைக் கடலடியில் இருத்தினான் என்னுங் கதைக் குறிப்பை, இவர், அரசன் காதல் வெப்பம் பொறாதுரைக்கும் உரையிற் புலப்படுத்தல் காண்க (44).