பக்கம்:மறைமலையம் 7.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

66

மறைமலையம் - 7

விழுநறவு வேண்டிவிரி மாவிணரிற் பருகிச்

செழுமுளரி யிடைவறிது சேருமிள வண்டே!

செழுமுளரி யிடையிருந்து திகழ்மாவை நீயோர்

பொழுதுமறந் துறைகுவது பொருந்துமோ உரையாய்?”

என்னும் இசைப்பாட்டைக் கேட்டதும் அரசன், துருவாசர் இட்ட வசையால், தான் சகுந்தலையை மணந்த வரலாற்றினை மறந்துபோகியும், அப்பாட்டின் பொருளால் தன் மனங் கலக்குறுத்தப்பட்டு,

"இத்தன்மையான பொருளைத் தரும் இப்

பாட்டைக் கேட்டவுடனே, காதலொருவரைப் பிரியா திருக்கையிலும், எனக்கு ஏன் இத்தகைய பெருங் கலக்கம் உண்டாகின்றது?”

எனத் தனக்குட் சொல்லித், தான் செய்து மறந்துபோன குற்றத்தைத் தான் அறியாமலே ஒருவாறு நினைந்து வருந்து மாறு வைத்து ஆசிரியன் அமைத்த இந்நுண்ணமைப்பு ஏனை யெல்லாருஞ் செய்தற்கு எளிதில் வாய்வதன்று.

இன்னுங், காசியபரது தவப்பள்ளியில் துஷியந்த மன்னன் தன் புதல்வன் சர்வதமனனைத் தலைப்படுமாறும், அங்ஙனம் அவனைத் தலைப்படுகின்றுழி, அவனைத் தன் மகனென அவன் உணருமாறும், அதன் பின்னர் இரு பொருள் படுஞ் ‘சகுந்தலாவண்யம்' என்னுஞ் சொற்றொடர்கொண்டு அரசன் தன் மனையாளான சகுந்தலை அங்கிருத்தலை யுணருமாறும் பிறவுமெல்லாம் எத்துணை நுட்பமாக எத்துணைத் திறமையாக ஆசிரியனால் தொடுக்கப்பட்டுள்ளன வென்பதை நன்கு ஆராய்ந்து பார்மின்கள்! இவைபோலும் நுண்வினைத் திறங்கள் இந்நாடகத்திடையிடையே மிளிர்தலை நுனித்தாராய்ந்து அறிதலே செயற்பாலது; அவையெல்லாம்

ஒருங்கே ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியுமென விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/167&oldid=1578296" இலிருந்து மீள்விக்கப்பட்டது