பக்கம்:மறைமலையம் 7.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

10. இந்நாடக அமைப்பிற் சில குறைபாடுகள்

தம் தந்தை கண்ணுவரது தவப்பள்ளியில் அவர் இல்லாதபோது விருந்தினனாய் வந்த துஷியந்த மன்னனை வரவேற்றுச், சகுந்தலையின் தோழிமார் அவற்குச் செய்யும் விருந்தோம்பல்கள் பாராட்டற்பாலனவே யாயினும், அவர்கள் அரசனைக் கண்டு முதன்முதல் உரையாடும்போதே,

சகுந்தலையை அவற்கு மனைவியாக்க விழைந்து,

66

அன்புள்ள சகுந்தலா, இன்று உன் தந்தை இங் கிருந்தால் தம் வாணாள் முழுமைக்கும் மிக விலையுயர்ந்த களஞ்சியமாய் உள்ளதைக் கொடுத்து, இச் இச் சிறந்த விருந்தினரை மகிழ் வித்திருப்பர்.” (17).

என நாணஞ் சிறிதுமின்றி மொழிந்தனராக ஆசிரியன் நுவல்வது பொருத்தமாயில்லை. புதிது வந்த ஒருவனொடு பழகியறியா முன்னரே, சகுந்தலையைப் போலவே மணமாகா இளம் பருவத்து மங்கையரான அனசூயை பிரியம் வதை யென்னும் அவடன் றோழிமார் இருவருந் தம் அச்சமும் நாணமும் விண்டு, அவ்வரசற்குச் சகுந்தலையை மணஞ் செய்வித்தல் பற்றித் தாமே அவனிடம் வலிந்து பேசினா ரென்றல், அச்சம் நாணம் மடம் என்னும் விழுமிய பெண்மைக் குணங்கள் இயற்கையே யுடைய மகளிர்க்குச் சிறிதும் ஏலாது.

கவே, அரசனை முதன்முதற் கண்ட அப்பொழுதே அவர் அங்ஙனம் அவன் எதிரே மொழிந்தனராக ஆசிரியன் நுவன்றது ஒரு குறைபாடேயாம்.

தமது

இங்ஙனமே இந் நாடகத்தின் முதல் இரண்டு வகுப்புக் களிலுஞ் சகுந்தலையின் தோழிமார் இருவருந் நாண்ட கைமைக்கு இசையாவாறு இடை டயிடையே உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/168&oldid=1578297" இலிருந்து மீள்விக்கப்பட்டது