பக்கம்:மறைமலையம் 7.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் - 7

நிகழ்த்தினராக ஆசிரியன் கூறுவனவெல்லாம், ஆசிரியன் உயர்ந்த பெண்மைக் குணங்களை நன்காராய்ந்துணராக் குறைபாட்டால் நிகழ்ந்தனவே யாகுமல்லால், அவை அப்பெண் மக்கள்பால் உண்மையில் நிகழ்ந்தனவாகா வென்று கடைப் பிடிக்க.

வாய்

அற்றன்று, கானகத்தே துறவோர் குடியில் வளர்ந்தவரான அம் மாதரா ரிருவருங் கள்ளங் கவடு சிறிது மறியா வெள்ளை யுள்ளத்தினராகலான், அவர் அங்ஙனம் பேசினாராதல் கூடும்; ஆகலான், அவர்தாம் பேசியதனைப் பேசியபடியே கூறியது ஆசிரியனுக்குக் குற்றமாகாதா லெனின்; நன்று சொன்னாய், சகுந்தலையுந் துறவோர் குடியில் வளர்ந்தவளாகலின், அவளும் அங்ஙனமே அரசனொடு நெருங்கி அளவளாய்ப் பேசினா என்று ஆசிரியன் கூறுதல்வேண்டும்; மற்றுச், சகுந்தலையோ அரசனொடு சிறிது பேசும் அளவுக்குங் கூசி வாளாதிருந்தனள் எனக் கிளக்கும் ஆசிரியன், அவடன் றோழிமார்மட்டும் அங்ஙனம் நாண் துறந்து, பேசும்வரை கடந்து பேசினாரெனல் அடாது. கானகத்திருப்பினும் நாட்டகத் திருப்பினுந் துறவறத் திருப்பினும் இல்லறத் திருப்பினும் பெண் பாலார்க்குரிய அச்சம் நாணம் மடம் என்னும் இயற்கைக் குணங்கள் அவர்பால் என்றும் எவ்விடத்தும் உளவாயே காணப்படும். அவ்வியற்கைக் குணங்களை மேற்கொண்டு எழூஉம் ஏனைக் காதல் சினம் வஞ்சம் முதலான உள்ள வேறுபாடுகள் மிக்குத் தோன்றுங்காலன்றி, மற்றைக் காலங்களில் அப் பெண்மைக் குணங்கள் புலனாகா தொழியா வென்று பகுத்துணர்ந்து கொள்க.

ஓர்

இனி, இந்நாடகக் கதை நடந்துசெல்லுதற்கு அச்சாணியாக ஆசிரியன் துருவாசரது வசைமொழியினை டையே பிணைத்தது நுட்ப வினைத்திறத்தின்பாற்படுவ

தான்றேயாயினும், அருந்தவத்தான் மனந்தூயரான அத்துறவி, பிழையேதுஞ் செய்திலாச் சகுந்தலையாகிய ஓரிளம்பருவப் பெண்மேற் கடுஞ்சினங் கொண்டு அவளை வைது, அவளை அளவிறந்த துன்பத்திற்கு ஆளாக்கினாராக ஆசிரியன் உண்மையில் நடவாத தொன்றனைப் புனைந்து கட்டியது ஒரு பெருங் குறைபாடேயாகும். இதனை முன்னரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/169&oldid=1578298" இலிருந்து மீள்விக்கப்பட்டது