பக்கம்:மறைமலையம் 7.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

145

விளக்கிக் காட்டினாம். நாடகக்காப்பியப் புலமையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேராசிரியராகிய சேக்குவீயர், காதலன்பிற் கனிந்தார்க்கு உதவியாகவன்றி, அவர் தமக்குப் பகையாகத் தூயரான துறவிகளைப் பிணையாத நுட்பமும் முன்னரே எடுத்துக்காட்டினாம்.

இனி, இயற்கைக்கு முழு மாறான நிகழ்ச்சிகளை ஆசிரியன் இந்நாடகக் கதை நிகழ்ச்சியின் இடையிடையே புகுத்தி யிருப்பது, இதனைப் பயில்வார்க்கு உண்டாம் இன்பவுணர் வினைச் சிதைப்பதா யிருக்கின்றது. சகுந்தலை துஷியந்த மன்னனை யாழோர் முறையில் மணந்து கருக்கொண்டிருக்குஞ் செய்தியினை, வானின்கட் டோன்றிய ஒரு தெய்வ ஒலி, அவள் தந்தை காசியபர்க்கு அறிவித்த தெனும் புனைந்துரை, பயில்வார்க்கு மகிழ்ச்சி தருவதாயில்லை; அவடன் றோழிமார் வாயிலாகவே அச் செய்தி அவரது செவிக்கு எட்டியிருக்க வேண்டுமாகலான். இச் சிறு நிகழ்ச்சிக்கு ஒரு தெய்வ ஒலியினைக் கொணர்ந்து மாட்டியது நாகரிக அறிவின்பாற் பட்டதாயில்லை யென்றுணர்க.

துவேயுமன்றிக், காசியபர் தம் மகள் சகுந்தலையைக் கணவன் இல்லத்திற்குப் போக்குங்கால் அவளை ஒப்பனை செய்தற்பொருட்டாகத், தமது பாழியிலுள்ள மரங்களை வேண்ட, அவை பட்டாடைகளையுஞ் செம்பஞ்சிக் குழம்பை யும் மணிக்கலன்களையுங் கான்றனவென்று ஆசிரியன் புனைந்து கட்டியதும், அரசனை வானுலகுக்கு அழைத்துச் செல்லும்பொருட்டு வானூடு கட்புலனாகாது வந்த மாதலி, அரசற்கு விதூஷகனான மாதவியனைப் பிடித்துக்கொண்டு மேற்சென்று அவனது கழுத்தை முறிக்கலாயினானென இயற்கையொடு திறம்பி சைவின்றி இசைத்ததும் சைத்ததும் பிழை பாடுகளேயாகும்.

இன்னுந், தேவர்க்கரசனான இந்திரற்கு அரக்கரால் நேர்ந்த இ ரை, மண்ணுலகத்துளனான ஒரு மன்னன், அவ் விந்திரனால் அழைக்கப்பட்டு வானுலகு சென்று நீக்கினா னென்றல், சிறிதும் நம்பகத்தக்கதா யில்லை. ஏமகூட மலைக் கண்ணதான மாரீசரது தவப்பள்ளியில் வைகுஞ் சகுந்தலையை அரசன் மீண்டுங் கண்டு தலைக்கூடுதற்கு வாயிலாகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/170&oldid=1578299" இலிருந்து மீள்விக்கப்பட்டது