சாகுந்தல நாடக ஆராய்ச்சி
147
தன்மகளும் அவள் காதலனும் ஒருங்குசென்றவழி தேடிச் செவிலித்தாய் எதிர்வரும் முக்கோலந்தணரை
சன்ற வினாதல்:-
66
"எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல்அசைஇ வேறுஓரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்! வெவ்விடைச் செலன்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனுந் தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!”
அதற்கு அம்முக்கோலந்தணர் கூறும் விடை:-
“காணேம் அல்லேம், கண்டனம் கடத்திடை ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய மாணிழை மடவரல் தாயிர் நீர் போறீர்!”
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்? நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே”
"சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே'
“ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்? சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே”
எனவாங்கு,
“இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறந்தலை பிரியா ஆறும் மற்றதுவே”
(பாலைக்கலி, 9)
இவ்வரும்பெறற் பழந்தமிழ்ப்பாவிற், பெற்றார் உற்றார் உடம்பாடு சிறிதுமின்றித் தம்மகளும் அவள் காதலனுந்