150
மறைமலையம் - 7
அறிவிப்பதாயிற்றென்றுங் காளிதாசர் நுவலாநிற்க, மற்றுப் பண்டைத் தமிழாசிரியரோ இன்னோரன்ன புல்லிய நிகழ்ச்சிக்கெல்லாந் தெய்வத்தை இடைக்கொணர்ந்து நுழையாராய், உலகியலோடொட்டவே வைத்துக் கதையினை நடாத்துமாறு காட்டுதும்:-
ஒரு தலைவி தமரறியாமலே தான் விழைந்த ஒரு காதற்கணவனை யாழோர் மணம் புணர்ந்து ஒழுகாநிற்புழி, அவ்விருவரையுந் திருமணம் புணர்த்தி இல்லற வாழ்க்கையில் நிலைப்பித்தற் பொருட்டும், அத்தலைவியைப் பெற்றோர் வேறெவாக்கும் மக்கட்கொடை நேராமைப்பொருட்டும், அவடன் இன்னுயிர்ப் பாங்கியே, அவட்கும் அவடன் காதலர்க்கும் உண்டான காதற்கிழமையினைத் தக்கதோ ராற்றால் முதலிற் செவிலித்தாய்க்கு அறிவுறுத்தா நிற்ப ளென்றும், அதுகேட்ட செவிலித்தாய் அஃது அறமே யெனவுணர்ந்து அதனை நற்றாய்க்கு அறிவுறுப்பளென்றும், அந் நற்றாயும் அதனை அங்ஙனமே அறமெனக் கருதித் தன் கணவற்கு அறிவிப்பளென்றும், அவனும் அதனை அன்னதாகவே நினைந்து பார்த்துத் தன்னையர்க்குந் தமர்க்கும் அறிவியா நிற்பனென்றும். இங்ஙனம் அவ்விருவர்க்குள் உண்டான மறைந்த காதற்கெழுதகைமையினைத் தோழியிற் றுவங்கி ஒருவர் ஒருவர்க்கு அறிவித்து மறை புலப்படுத்துவதே அறத்தொடு நிற்றல் ஆகுமென்றுந் தொல்லாசிரியராகிய தொல்காப்பியனார்,
"பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும் முன்னிலை அறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்
என்னுங் களவியற் சூத்திரத்திற் (23) கிளந்தமையுந், தொல்காப்பிய அகப்பொருளுக்கு வழிநூல் செய்த ஆசிரியர் இறையனார்,
“தோழிக் குரியவை கோடாய் தேஎத்து
மாறுகோள் இல்லா மொழியுமா ருளவே”
(இறையனாரகப்பொருள், 14)