சாகுந்தல நாடக ஆராய்ச்சி
151
இவ்விறை
என்னுஞ் சூத்திரத்து ஓதினமையுங் காண்க. யனாரகப்பொருட் சூத்திரத்திற்கு விழுப்பேருரை வகுத்த ஆசிரியர் நக்கீரனார் அறத்தொடு நிற்றலை விளக்கி யெழுதிய உரைப்பகுதி அழகும் அறிவும் ஒருங்குவிராய்த் துலங்குதலின், அதனை இங்கே பெயர்த்தெழுதிக் காட்டுவாம்:-
“இதன் பொருள் தோழி சொல்லுதற்கு உரிய சவிலித் தாய்மாட்டு மாறு கொள்ளாமைச் சொல்லுஞ் சொற்களும் உள என்றவாறு.
"எற்றினொடு மாறுகொள்ளாமையெனின்; தாயறி வினொடு மாறுகொள்ளாமையுந், தலை மகள் பெருமையொடு மாறுகொள்ளாமையுந், தலைமகள் கற்பினொடு மாறு கொள்ளாமையுந், தோழி தனது காவலொடு மாறுகொள் ளாமையும், நாணினொடு மாறுகொள்ளாமையும், உலகி னொடு மாறுகொள்ளாமையும் எனக் கொள்க.
"தாய் பிற்றை ஞான்று சிறுகாலையே படிமக்கலத் தொடும் புக்காள், மகளை அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கினாள், நோக்கி, அன்னாய்! என் மகள் பண்டையள் அல்லளால். இவ் வறுபாடு எற்றினான் ஆயிற்று? நின்னால் அறியப்படுவ துண்டோ? என்னும். என்றவிடத்து,
வள், ‘அன்று கொண்டு என்னாலுஞ் சிறிதுண்டு அறியப்படுவது, யாதோ வெனின், எம்மைக் கூழைக் கற்றைக் குழவிப் பிராயத்து மாழை கலந்த ஏழை நீர்மையாரொடு நாட்கோலஞ்செய்து விளையாடி வம்மினென்று னன்று போக்கினாய் போக்கினாய் போக்கின்வழி, யாம்போய், ஒரு வெண்மணல் பரந்த தண்மலர்ப் பொழிலிடை விளையாடி நின்றேமாக, ஒரு தோன்றல் ஒரு சுனைக்குவளைப் பூக்கொண்டு அவ்வழியே போந்தான், போதர, நின்மகள் அவனைநோக்கி, அப்பூவினை என்பாவைக்கு அணியத் தம்மின் என்றாள், அவனும் பிறிது சிந்தியாது கொடுத்து நீங்கினான். இஃது அறிவது