பக்கம்:மறைமலையம் 7.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் - 7

புலவன்றன் மதி நுட்பத்திற்கும் மிக இயைந்ததொன்றாகும். காளிதாசர் இவ்வியல்பினைத் தமிழாசிரியரைப்போல் நன்கறிந்திருந்தனராயிற், சகுந்தலையின் காதலொழுக்கத்தினை அவடன் தந்தை கண்ணுவமா முனிவர்க்கு அறிவித்தற் பொருட்டு இயற்கைக்கு மாறாய்ச் சென்று ஒரு தெய்வ வொலியினைக் கொணர்ந்து பிணைத்திரார்; மற்று, அவடன் றோழிமாரே அதனை முதலிற் கௌதமியம்மையார்க்கு அறிவிப்ப, அவர் அதனைக் கண்ணுவமாமுனிவர்க்கு அறிவிப்ப, அம்முனிவர்பிரானும் அதனை ஏற்று மகிழுமாறு செய்திருப்பர். கண்ணுவமாமுனிவர் காதற்பேரன்பின் வழித்தான் யாழோர் மன்றலை ஏற்குந்தன்மையர் என்பது அனசூயைகூறும் உரையால் நன்குபுலனாதலின் (60), தோழிமார் அதனை அவர்க்குக் கூற அஞ்சியிருப்பரென்று, கொள்ளுதற்கும் இடமில்லை. அங்ஙன மிருக்கக், காதற் கிழமையின் விழுப்பம் உணர்ந்த அம்முனிவர்பிரான்றன் உள்ளப்பான்மையினை நன்கறிந்த பின்னரும் அவடன் றோழிமார் அவர்க்கு அதனை அறிவியாதிருந்து விட்டன ரென்றும், ஆகவே வானிடை நிகழ்ந்த ஒரு தெய்வவொலியே அவர்க்கதனை அறிவித்த தென்றுங் கொன்னே உலகியலொடு மாறுகொண்டு காளிதாசர் அதனைப் புணர்த்தியது ஒருகுறை பாடேயாமென விடுக்க,

அதுவேயுமன்றிப், புதிதுவந்த ஏதிலனான ஓர் அரசனைக் கண்டதுஞ் சகுந்தலையை அவற்கு மணஞ்செய்து கொடுக்க அவடந்தை விரும்புவரென அத்தோழியர் அவன் முன்னிலையில் அவட்குச்சொல்லினரென அவர்க்கு அச்ச மின்மையையும் நாணமின்மையையும் முன்னர்க் கற்பித்த காளிதாசர் பின்னர்அவர் தமக்குத் தந்தையாகக் கருதி நடிதுபழகிய கண்ணுவ முனிவர்பால் அச்சங்கொண்டு அதனைச் சொல்லாதுவிட்டனரெனப் புனைந்தது முன்னெடு பின் மாறுகொண்டு நிற்றலும் ஓர்க.

இனி, அரசன் முன்னிலையிலன்றிச் சகுந்தலையின் பக்கமாய்த் திரும்பி மறைவாய் அவளது செவியில் அதனைப் பகர்ந்தனரெனக்கோடுமெனின்; ஆண்டும் அக்குற்றஞ்சாரா தொழியாது; என்னை? ஏதிலான் ஒருவனைக் கண்ட அந்நொடியே அவன்றன் இயற்கையினை ஆராய்ந்து பாராது, கதுமென அவளை அவற்கு மணமகளாக்குதல் குறித்து அவட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/179&oldid=1578308" இலிருந்து மீள்விக்கப்பட்டது