பக்கம்:மறைமலையம் 7.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

155

அவ்விருவரும் உரைத்தாரெனிற், சகுந்தலையை அத்துணை எளியளாகக் கருதியகுற்றமும், அவள் மாட்டும் அதனை நாணமின்றியுரைத்த குற்றமும் வராநிற்கும் அல்லதுஉம், அரசனுடன் சகுந்தலையைப் பொருத்துங்காறும் அத் தோழிமார் இருவருங் கூறுவனவுஞ் செய்வனவுமெல்லாம் அச்சமும் நாணும் உடைய பெண்டகைமைக்கு இயையாவா யிருத்தலையும் முன்னரே விளக்கிப் போந்தாம்.

மற்றுத், தலைவியையுந் தலைவனையும் இடைநின்று இயைவிக்குந்தோழி தனது பெண்டன்மைக்கு ஏற்பவுந், தலைவி தன் தலைமைத் தன்மைக்குப்பொருந்தவுந், தலைவன் தான் காதலித்த தலைவி தனக்குக் கிடைத்தற்கரியள் என்று கருதி ஏங்கவும் ஒழுகி அவர் தம்மைப் பொருத்தும் நுட்பவகைகள், உயர்ந்த மக்களியற்கையோடும், அதற்கேற்ற அவர் தம் ஒழுகலாறோடும் ஒருங்கொத்து நிற்குமாறு வைத்துத் தமிழ்த்தொல்லாசிரியர் நாடக நூல் யாத்தமை, ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்த “நாற்றமுந் தோற்றமும் என்னுங் களவியற் சூத்திரத்தானும், இறையனாரகப் பொருளிற் போந்த, “ஆங்குணர்ந் தல்லது கிழவோள் தேஎத்துத் தான்குறை யுறுதல் தோழிக் கில்லை

66

“முன்னுற உணரினும் அவன்குறை யுற்ற பின்ன ரல்லது கிளவி தோன்றாது”

“உள்ளத் துணர்ச்சி தெள்ளிதிற் கரந்து

கிழவோள் தேஎத்துக் குறையுறூஉம் உளவே குறிப்பறி வுறூஉங் காலை யான

என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களானும் அவற்றிற்கு விரித்த ஆசிரியர் நக்கீரனாரதுரை யானும் நன்குணர்ந்து கொள்க. அவையெல்லாம் ஈண்டு விரிக்கின் இது வரம்பின்றிப் பெருகும் என்க. அது நிற்க.

வானுலகு

ஈற்றில், இந்திரனது வேண்டுகோளுக்கு ஒருப்பட்டுத் துஷியந்தன் சன்று மீண்ட П னன ஒன்று புனைந்தது. இயற்கை நிகழ்ச்சியோடு ஒவ்வாதாயினும், அது மீண்டும் அரசன் சகுந்தலையைத் தலைக்கூடுதற்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/180&oldid=1578309" இலிருந்து மீள்விக்கப்பட்டது