சாகுந்தல நாடக ஆராய்ச்சி
157
எனவும்,
‘வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென்
றாங்க விரண்டும் இழிந்தோர்க் குரிய'
எனவும்,
"நான்கு வருணமுங் கூறி, நால்வகைத் தலை மக்களையும் உணர்த்தலின், இல்ல தென்பது தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்க.
என்று வலியுறுத்திக் கூறியவாற்றால் ‘இல்லது' என்பதற்கு யாண்டும் எஞ்ஞான்றும் இல்லது' எனப் பொருளுரைத்தல் தொல்லாசிரியரது தமிழ் வழக்கிற்கு இசையாமை தெள்ளிதின் விளங்கற்பால தாகும். பட்டது பட்டாங்கு கிளக்குந் தமிழ்ச் சான்றோர் மலிந்த இத்தென்றமிழ் நாட்டிலிருந்து அவரது புலனெறிவழக்கிற் பயின்றிருந்தனராயிற் காளிதாசர் யாண்டும் எஞ்ஞான்றும் நடவாத இப்புனைந்துரையும் இதுபோல்வன பிறவும் இந்நாடக நூலின்கட் படைத்துப் புகுத்தியிரார் இயற்கையில் நடவாப் பொய்ந் நிகழ்ச்சிகளைத் தாம் வேண்டியவாறெல்லாம் படைத்து வழங்கவிடும் ஆரியர் நிறைந்த வடநாட்டின்கண் இருந்தமையினாற்றான் அவர் இவை போல்வனவற்றைத் தாமும் படைத்துத் தாம் இயற்றிய அரிய நூல்களில் ஆங்காங்கு நுழைத்து இழுக்குவாராயினர் என்க.
வை
அற்றேல், துஷியந்த மன்னன் இந்திரற்கு உதவி செய்தற் பொருட்டு வானுலகு சென்று மீண்ட பொய்ந் நிகழ்ச்சியினை விட்டுப், பிறிதொரு மெய்ந் நிகழ்ச்சியால் அவன் சகுந்தலையை மீண்டுந் தலைக்கூடுமாறு செய்து இந்நாடக நிகழ்ச்சியினை நன்கினிது முடித்தல் இயலுமோ வெனின், இயலும்; அது காட்டுதும்:-
இந்திரன் என்பான் கடாரதேயத்தின்' அரசனே யாவன். இத்தேயங் கிழக்கே யுள்ளமையால் இந்திரன் கீழ்த்திசைக் காவலன் என்று பண்டுதொட்டு வடநூல்களில் நுவலப்பட்டு வருகின்றனன். இந்திரனது நாட்டில் ‘ஐராவதம்' என்னும் யாறு ஓடுவதாகவும், அதன்கண் வெள்ளையானை யுளதாகவும்,