சாகுந்தல நாடக ஆராய்ச்சி
161
இன்னுங், காசியப முனிவரது கானகப் பாழியிலும், அதனையடுத்திருந்த பாழியிலும் வைகித் தவம் புரிந்த முனிவர்களுந் தம் மனைவிமாரோடு ஒருங்கிருந்தே தவஞ்செய்தமை இந்நாடகத்தின் நான்காம் வகுப்பினால் (68) நன்கறியப் பெறுகின்றேம்.
பண்டைக்காலத்தில் அருந்தவவொழுக்கத்திற் றலை சிறந்து நின்ற முனிவர்கள் பல்லாண்டுகள் தம்மை மறந்து தவம் புரிவதிற் கருத்தழுந்தி நின்றமை,
66
க
கரையான்புற்றிற் பாதி மறைந்த வடிவத் தோடும், பாம்புரிகள் ஒட்டிக்கொண்டுள்ள மார்போடும், பழங்கொடி களின் இளவிழுதுகள் வளையமாய் இறுகச்சுற்றிக் கொண்டிருக் குங் கழுத்தோடுந், தோள்வரையில் தொங்கிக்கொண் டிருப்பதும் பறவைக்கூடுகள் நிரம்பப்பெற்றது மான சடை முடியோடுங் கதிரவன் ஒளி வட்டத்தின் எதிர்முகமாய் நின்றபடியே அடிமரம் போல் அசைவின்றி அதோ தவம்புரியும் அம் முனிவருள்ள இடம் அதுதான்.”
என்று மாரீசரது தவப்பள்ளியைக் குறிப்பிடும் இந்
நாடகத்து ஏழாம் வகுப்பின் பகுதியால் னிதறியக்
கிடக்கின்றது (133).
அதுவேயுமன்றி, அம்முனிவர்கள், தமதகத்தே ஒளி வடிவிற் றுலங்காநின்ற இறைவனது அருளுருவிற் பதிந்து நின்ற தமது கருத்தைப் புறத்தே திருப்பி இஞ்ஞாலத்தில் இயங்கவிடுங் காலங்களிலும், அகத்துக்கண்ட ஒளியோடு ஒப்பதான தீயினொளியை வேள்விக்குண்டங்களில் வளர்ததுப் புறத்தேயுந் தமது நினைவை அவ்வொளியின்கண் நிறுத்தி இறைவனை வழிபட்டுவருதலில் நிரம்பவும் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு முனிவர்கள் வேட்டுவந்த வேள்விகளில், ஆடுமாடு முதலான எத்தகைய உயிருங் கொல்லப்பட்ட குறிப்புச் சிறிதுங் காணப் படாமையின், அவர் வேட்ட அவ்வேள்விகள் அருளறத்தின் பாற்பட்டன வாதல் தெளியப்படும்.