162
மறைமலையம் - 7
ஆனால், அஞ்ஞான்றைப் பார்ப்பனர் ஆற்றிய வேள்வி களிலும், அரசர்கள் ஆற்றிய வேள்விகளிலும் ஆக்கள் கொலை செய்யப்பட்டமை முறையே ஆறாம் வகுப்பிற் செம்படவன் கூறும் உரையாலும் (100), ஐந்தாம் வகுப்பில் அரண்மனை வாயில் காவலன் கூறும் உரையாலும் (85) நன்கறியப் படுகின்றது.
ம
அஃதல்லாமலும், பழையநாளிலிருந்த பார்ப்பனர் விலங்கின இறைச்சியை உணவாகக்கொண்டுவந்தமை இதன் இரண்டாம்வகுப்பின் துவக்கத்திற் பார்பனனாகிய மாதவியன் கிளக்குஞ் சொற்களால் தெளியப்படுகின்றது. வடநாட்டின் மட்டுமேயன்றித் தென்றமிழ்நாட்டில் அஞ்ஞான்று குடியேறி வைகிய ஆரியப் பார்ப்பனரும் ஊன்உண் வாழ்க்கையராய் இருந்தமை புறநானூற்றில் நல்லிசைப்புலவராகிய கபிலர் பாடிய செய்யுளாற் புலனாதலை, இதன் விளக்கவுரைக் குறிப்பின்கண் விளக்கிக்காட்டியிருக்கின்றேம்.
அதுவேயுமன்றி,
அஞ்ஞான்றிருந்த
பார்ப்பனர்
அரசனைப் பகடி மொழிகளால் மகிழ்விப்போராயும், அவற்காக மகளிர்பாற் றூது செல்வோராயுமிருந்தனர்.
இனி, அரசர்கள் செங்கோலோச்சி ஆண்டு முதிர்ந்த பின், தமதரசைத் தம் மக்கள்மேல் ஏற்றித், தாம் தம் மனைவியருடன் கானகம்புக்குத் தவவாழ்க்கையைக் கைக்கொள்ளும் வழக்கம் பண்டை நாளில் நிகழ்ந்தமை, நான்காம் வகுப்பிற் காசியப முனிவர் பகரும் மொழியாற் புலனாகின்றது (79).
அரசர்கள் தம் குடிமக்களிற் செல்வராயுள்ளார் மகப் பேறின்றி இறந்துபட்ட வழியும் அவர்தம் பொருளைக் கவர்ந்து கொள்ளாமல், அவர்க்கு எவ்வகையிலேனும் உறவினராய் உள்ளாரைத் தேடி, அவர்க்கு அதனை ஒப்படைக்கும் நடுநிலையுடையராயிருந்தமை துஷியந்தனது வாய் மொழியாற்
போதருகின்றது (121,122).
அஞ்ஞான்றை அரசர்கள் ஒரு வழக்கின் உண்மையைத் தெரிந்து தீர்மானித்தற்கு மிகச் சிறந்த சான்றுகளை ஆராய்ந்து தெளிவதிற் கருத்துமிக்கிருந்ததூஉம், வலிய சான்றுகள் காட்டாது வாளா சினந்துபேசுவார் மொழிகளையும்