பக்கம்:மறைமலையம் 7.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

163

தன்

காணர்ந்த

பொறுமையுடன் கேட்டிருந்ததூ உந், துஷியந்தன் னயாளான சகுந்தலையைத் தன்மாட்டுக் முனிவரின் மாணவருடன் வியக்கத்தக்க அமைதியுடன் உரையாடுமாற்றால் தெளியப்படும் (88-96). அஞ்ஞான்றை அரசர்கள் எக்குலத்தாரையும் வேற்றுமையின்றிப் பாதுகாத்து வந்தனர் (89); தமது கடமையைப் பெரிதும் ஓம்பினர். (83).

கிரேக்கநாட்டு ஐயோனிய (Ionian Greeks) மாதர்கள் இவ்விந்திய தேசத்து அரசர்கட்கு மெய்காப் பாளராகக் கையில் வில்ஏந்தி நிற்றல் இரண்டாம் வகுப்பின் றொடக்கத்தில் விதூஷகன் கூறும் மொழிகளால் அறியப் படுகின்றது (27). காளிதாசர்க்கு முன்னிருந்த பாசன் என்னும் ஆசிரியர் இயற்றிய நாடக நூலிலும், அவர்க்குமுன் முதல் நூற்றாண்டில் தமிழ் நாட்டின்கண் இருந்த ஆசிரியர் நப்பூதனார் இயற்றிய

முல்லைப்பாட்டிலும் இங்ஙனமே யவனர்கள் இந்நாட்டரசர்க்கு மெய்காப்பாளரா யிருந்தமை நுவலப்படுதல் காண்க. இதுகொண்டு மேல் பாலுள்ள கிரீசு உரோம் முதலான நாடுகளிலுள்ளாரும் இவ் விந்திய நாட்டாரும் பண்டைநாளிலிருந்தே வாணிக வாழ்க்கையில் ஒருங்கு அளவளாவிய வரலாறு தெற்றெனப் புலனாகின்றது.

L பழையநாள் அரசர்களுஞ் செல்வர்களும் மனைவிமார் பலரை மணந்திருந்ததுடன், மனைவியர்க்கு அடுத்த நிலையிற் காதற்பரத்தையர் பலரையுந் தமக்கு உரிமையாக வைத்திருந்த ணனர் (54, 80, 118). காதற்பரத்தையரென்பார் ஒருவனுக் குரிமையாக இருமுதுகுரவரால் வளர்த்துச் சேர்த்துவைக்கப் பட்டவர்; பலர்க்குப் பொதுவான பொதுமகளிர் அல்லர்.

இருமுதுகுரவர் அறிவும் உடம்பாடுமின்றி ஓர் ஆடவனும் ஒரு மங்கையும் எதிர்ப்பட்டுத் தமக்குள் உண்டான காதலன்பு காரணமாகத் தாமே மணஞ்செய்து கொள்ளுதலும், அதனையறிந்த அவர்தம் பெற்றாரும் உற்றாரும் பிறரும் அக்கா தன் மணத்தை மகிழ்ந்து ஏற்றலும் அக்காலத்தே வழக்கமாய் நடந்துவந்தனை இந்நாடக நூலானும், பிற பழைய நூல்களானும் நன்கறிகின்றோம்.

அரசர்களுங்கூட அந்நாட்களில் ஓவியம் எழுதுதலில் வல்லராயிருந்ததை உற்றுநோக்குங்கால், அவரல்லாத பிறரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/188&oldid=1578317" இலிருந்து மீள்விக்கப்பட்டது