பக்கம்:மறைமலையம் 7.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன் * 2. பெரும் புலவர்

தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும்புலவ ருள்ளும் பெரியார் தனியே அரும்பொன் மறைமலை யார்.

3.பாவலர்

உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த விரைவுடையார்சில்லோர் வியன்பார் - மறைமலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி மும்மணிக் கோவை முறை.

4. ஆராய்ச்சியாளர்

நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார்

பாலையும் முல்லையும் பார்.

5. மும்மொழிப் புலவர்

மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச்

சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை

கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன்

கண்டதும் கேட்டது மில்.

6.மொழிபெயர்ப்பாளர்

வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று முடிகொள்ளுஞ் சாகுந் தலம்.

171

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/196&oldid=1578325" இலிருந்து மீள்விக்கப்பட்டது