பக்கம்:மறைமலையம் 7.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் - 7

7. சொற்பொழிவாளர்

இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும் நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப் பகைவரு முண்ணாது பன்னாளும் வேட்கும் வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு

8. எழுத்தாளர்

கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும் படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும் மற்றோர் உரைமறுப்பும் மன்னும் பதினவரை வற்றார்மறைமலை யார்.

9. பல்கலைச் செல்வர்

தோற்றும் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணுங் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு.

10. தனித்தமிழ் தந்தையர்

மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார்.

(அமரர் = போர் மறவர்)

மறைமலையடிகள்

நூற்றாண்டு

விழா T

மலர்

பாமாலை 1-2.

பொழிவுத் தலைப்பு, மறைமலையடிகளின் ஆராய்ச்சித் திறன். ‘ஆதலால் மறைமலையடிகளைப் பற்றிய ஆய்வும் தோய்வும் உடையவர்களும், அவரால் மதித்தும் பாராட்டியும் போற்றப் பட்டவர்களுமாகிய இவர்கள் உரையும் பாட்டும் கண்ட அளவில், ஆராய்ச்சிக்குச் செல்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/197&oldid=1578326" இலிருந்து மீள்விக்கப்பட்டது