178
மறைமலையம் - 7
செய்யுட்கள் மிகுதியாய் இல்லை, என்றாலும் அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன.
இங்ஙனமாக விழுமிய தமிழ்ப் பழநூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று என்கிறார்.
15.6.1876
இல்
பிறந்தார், அவர்க்கு
அடிகளார் இருபத்தோராம் அகவை என்பது 1897 ஆம் ஆண்டு அந்த ஆண்டுகள் தொல்காப்பியம் (1847. 1868.1885) சிலப்பதிகாரம் (1880) சிந்தாமணி (1887) கலித்தொகை (1887) பத்துப்பாட்டு (1889) மணிமேகலை (1894) புறநானூறு (1894) என்பவை அச்சில் வெளிப்பட்டிருந்தன, திருக்குறள் மூலம் 1812 ஆம் ஆண்டிலும். உரைப்பதிப்பு 1830 ஆம் ஆண்டிலும் வெளிப்பட்டன, இந்நூல்களையெல்லாம் அடிகளார் கற்றுத் தெளிய மனங் காள்ளவும் வாய்ந்தன, ஐங்குறுநூறு. அகநானூறு, பதிற்றுப் பத்து, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல்ஆகிய நூல்கள் 1903 முதல் 1918 ஆம் ஆண்டுகளுக்குள் வெளிவந்தவை. ஆகலின் இவை அடிகளார் தம் இளந்தைப் பருவக் கல்வி நூல்களுள் இடம் பெற்றில, இவற்றைப் பின்னே கற்றார் என்று கொள்ளுதல் முறையாம்.
ச
அடிகளார் தம் ஆய்வுக்கெனத் தொகுத்து வைத்த நூல் தொகுதிகள் எத்தகையவை என்பதையும் அவற்றை அடிகளார் பயன்படுத்திய வகையையும் 24.8.58 இல் சென்னை இலிங்கித் ல் தெருவில் மறைமலையடிகள் நூலகத் திறப்பு விழாவில் நூலக இயக்குநர் முனைவர்திரு. அரங்கநாதனார் எடுத்துரைத்தார்.
66
'அடிகளார் நூல்களையெல்லாம் முற்கால ஊழிகளின் காலங்கடந்த மதிப்புடைய கருத்துகளின் திருவுருக்கள் என்றே கருதினார். அவற்றை அந்நிலையிலே பயன்படுத்துவதற்கு அவர் விதிர்விதிப்புக் கொண்டார். தாம் பயன்படுத்தியதன் பின், அவர் இதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த சபரியின் சயலையே நினைவூட்டுவதாகும், சீராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற் காகவே
சபரி அவற்றின் தொகுப்பைத் திரட்டியதும்