பக்கம்:மறைமலையம் 7.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

179

இதுபோலப் பொதுமக்கள் சேவையை உளத்தில் கொண்டே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

66

அடிகள் ஏடுகளைத் திரட்டிச் சேர்த்தவை கடவுளின் திருவுணவுக்காகக் கண்ணப்பர் உணவு தேர்ந்தெடுத்துச் சேர்த்த முறையை ஒப்பதாகும். முதலில் தாம் தின்று சுவை பார்த்துக் கடவுளுக்கு ஏற்றதென்று கருதாத எதனையும் கண்ணப்பர் கடவுளுக்குப் படைக்க முன் வந்ததில்லை, மறைமலையடிகள் செயலும் இதுபோன்றதே.

தொகுதியில் உள்ள நூல்களில் அவர் முற்ற முழுக்க

வாசிக்காதது, வாசித்து, இது மக்களுக்கு கு அளிக்கும்

தகுதியுடையது என்று அவர் தேர்ந்தெடுக்காதது, ஒன்று கூடக் கிடையாது, ஏடுகள் ஒவ்வொன்றுக்கும் அவர் தனித்தனியாக அட்டை உறை இட்டுத் தூசிபடாமல் உன்னிப்பாகக் காத்து வைத்த முறையையும், ஏடுகள் ஒவ்வொன்றையும் வரிவரியாக முழுதும் வாசித்துப் பயன்படுத்திய பின்னும் புத்தம் புதியன போல அவற்றைப் பேணிய வகையையும் காண்போர் வியப் படையாமல் இருக்க முடியாது, ஏடுகளை அவர் வருங்காலப் பொதுமக்கள் பயனீடு நோக்கியே பேணி வைத்திருந்தார் என்பதற்குச் சான்றுகள் தேவைப்படுமானால், அதற்கு இஃது ஒன்றே போதியது ஆகும் புத்தகங்கள் ‘பயனீட்டுக்கே உரியவை’ என்னும் எனது நூலகத் துறையின் முதல் ஒழுங்கை அடி கள் தம் நோக்கத்தில் அன்றே கொண்டிருந்தார் என்பது தெளிவு என்கிறார்.

-

மறைமலையடிகள் நூல்நிலையம் 20 ஆம் ஆண்டு விழாமலர் 1-2.

தொகுப்பு:

அடிகளார் தொகுத்து வைத்த நூல்கள் ஏறத்தாழ நாலாயிரம் ஆகும். அவற்றுள் ஏறத்தாழ மூவாயிரம் நூல்கள் பல்வேறு துறைப்பட்ட ஆங்கில நூல்கள். எஞ்சியவை மிக அரியவையான தமிழ் நூல்களும் வடமொழி நூல்களுமாம், வெளிநாட்டில் வெளிப்பட்ட நூல்களை அரிதின் முயன்று தொகுத்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/204&oldid=1578333" இலிருந்து மீள்விக்கப்பட்டது