பக்கம்:மறைமலையம் 7.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

பிழைதிருத்தல் :

மறைமலையம் - 7

ஒரு நூலை ஓதத் தொடங்குமுன் ன் அந்நூலில் பிழைதிருத்தப் பட்டி இருக்குமானால் அதனைக் கண்டு அதில் குறித்தவாறு பிழை திருத்தம் செய்து கொண்ட பின்னரே ஓதுவதை முறையாக நூலில் இடம் பெற்றிருப்பின் அவற்றையும் குறித்தார்.

66

ஓதுதல் நாள் தவறாமல் குறித்த நேரங்களில் நூல் ஓதுதலை அடிகளார் சிக்கெனக் கடைபிடித்து வந்தார், விழுப்புண் படாத நாள் வீண் நாள்” என வீரர்கள் கருதுவது போலவும் பெரியனைப் பேசாத நாளெல்லாம்பிறவா நாளே என அடிகளார் பேசுவது போலவும், “ஓதா நாளெல்லாம் ஒழிந்த நாள்” எனக் கொண்டு கற்றவர் அடிகளார்.

"மன அமைதி இன்மையைப் புத்தகங்களைப் படிப்பதால் போக்கிக் கொள்வேன்

“படியாமல் ஒரு நாளைக் கழிப்பது பேரிழப்பாகும்

இன்று பகல் முழுதும் ஓய்வாக இருந்தேன் ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கவே விரும்புகிறேன். தாம் இன்புறுவதற்கும் மெய்யறிவு பெறுவதற்கும் இல்லாமல் தம்மைச் சார்ந்த மக்கள் அறிவு பெறச் செய்தற்கும் அவர்கள் சிறப்புற வாழ்தற்கும் படியாமல் எதற்காக வறிதே ஓய்வாக இருப்பது?

இவை அடிகளார் தம் நாட்குறிப்பில் பொறித்துள்ள சில நன்மணிகள். இவற்றால் அடிகளார் கொண்டிருந்த கல்விக் காதல் விளக்கமாகும்.

நூல் எடுத்தலும் முடித்தலும் :

ஓதுதற்கு எடுக்கப்படும் நூல் இன்ன நாளில் எடுக்கப் பட்டது என்றும் இன்ன நாளில் முடிக்கப்பட்டது என்றும் நாட்குறிப்பிலோ நூல்களிலோ குறிப்பது அடிகளார் வழக்கம்.

66

ஏலாதி படித்து முடிக்கப்பட்டது. ஆசாரக் கோவை படிக்க எடுக்கப்பட்டது” என்பது ஒருநாளில் எழுதிய குறிப்பு.

66

ஐந்திணை ஐம்பது படிக்க எடுக்கப்பட்டது" என்பது மற்றொருநாளில் எழுதிய குறிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/205&oldid=1578334" இலிருந்து மீள்விக்கப்பட்டது