பக்கம்:மறைமலையம் 7.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

து

181

யாழ்ப்பாணத்து வண்ணை நகர் சுவாமிநாதபண்டிதர் 1911 ஆம் ஆண்டில் தேவாரத் திருமுறையைப் பதிப்பித்தார். அப்பதிப்பில் ஒரு நூலை இது பதிப்பாசிரியாரால் சுவாமி வேதாசலம் அவர்களுக்குக் கையுறையாக அனுப்பப்பட்டது. 25.2.1912 என்று எழுதியனுப்பியுள்ளார். அதனை ஓதி முடித்த அடிகளார் அந்நூலின் இறுதியில் “நீண்ட காலமாக ஓதி வந்த இத்தெய்வத் தமிழ்த் திருமறை சாலி 1849 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 3 ஆம் நாள் முடிக்கப்பட்டது. மறைமலையடிகள் 18 ஆம் நாள் டிசம்பர் 1920 ஏ.டி. எனப் பொறித்துள்ளார்.

)

கோடும் குறியும் :

நினைவு கொள்ளத்தக்க சொல்லோ சொற்றொடரோ காணப்பட்டால் அவற்றின் கீழ் அடிக்கோடு இடுதலும் பக்கக் கோடு போடுதலும் அடிகளார் வழக்கமாகும். ஐயுறத் தக்க கருத்துக்களோ மறுதலையான கருத்துக்களோ காணப் பெற்றால் அவ்விடங்களில் வினாக்குறி இடுவார். அச்சுப் பிழைகள் உளவாயின் அச்சு மெய்ப்பைத் திருத்துமாறு இடப்படும் குறியீடு களை இடுவார்.

ஒப்புமை சுட்டல் :

பயிலும் நூல்கருத்துக்கு ஒத்த கருத்து வேறு நூலில் காணப்படுமாயின் அதனை ஆங்குக் குறித்து வைப்பது அடிகளாரின் வழக்கமாகும். "இயல்பாய ஈசனை யல்பாய ஈசனை" என்னும் திருக்கழிப்பாலைத் தேவாரத்தில் வரும் "மயலாய மாயக் குரம்பை” என்னும் தொடருக்கு மலமாக் குரம்பை திருவாசகம் எனக் குறித்துள்ளார்.

66

‘முன்னமிரு மூன்று சமயங்களவையாகி” என்னும் திருப்பு கலித்தேவாரத்தில் இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை என்னும் திருவாசகப் பகுதியைக் காட்டியுள்ளார்.

இவ்வாறே அரிதாக வழங்கும் சொல்லுக்கு ஒப்புமை காட்டலும் அடிகளார் வழக்காகும். குறுந்தொகை 15 ஆம் பா ல் விளக்கவுரையில் (உ.வே.சா. பதிப்பு) கல்யாணம் என்ற சொல்லைச் சுட்டி “இச்சொல் நாலடியாரில் வந்தது காண்க என்று குறிக்கிறார்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/206&oldid=1578335" இலிருந்து மீள்விக்கப்பட்டது