பக்கம்:மறைமலையம் 7.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

183

என்று

Commentator was Posterior to Chintamani” குறிப்பிட்டிருப்பதும் அரிய கால ஆராய்ச்சிக் குறிப்புகளாம்.”

இது பெற்றாம் எனல் :

செய்யுளில் வரும் குறிப்புக் கொண்டு "இதனால் இது பெற்றாம்" என்று ஒரு வாய்பாட்டு நெறியில் குறிப்பிடல் அடிகளார் வழக்கமாகும்.

தெற்கின் கண்ணது உட்கும் திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும் என்னும் உரைப்பகுதியில் (புறம். 6) இதனால் குமரியாறு உண்மை பெற்றாம்” என்றும்,

பதினைந்தாம் புறப்பாடலில் “பஃறுளியாறு கடல் கொள்ளப் படுமுன்னரே வேள்வி வேட்டல் உண்மை பெற்றாம்’ என்றும்,

ஐம்பத்தாறாம் புறப்பாடலில்சிவபிரான் முதற்கட் கூறப் பட்டிருத்தலின் இவனே முழுமுதற் கடவுள் என்பது பெற்றாம் என்றும்,

தொண்ணூற்று மூன்றாம் புறப்பாடலில், “தமிழ் மறைகள் அறத்தையே கூறும் என்பது பெற்றாம்” என்றும்,

“மாணிபால்” என்னும் அப்பர்தேவாரத்தில் “செம் பொன்னோடு வேய்ந்தமை அப்பர் காலத்திலேயே உண்மை பெற்றாம்" என்றும் இன்னவாறு குறிப்புகள் உள.

இயற்கையை வியத்தல் :

இயற்கை எழிலில் பெருநாட்டங் கொண்ட அடிகளார், செய்யுளில் வரும் இயற்கைப் புனைவுகளில் தோய்ந்து தோய்ந்து உள்ளூறிய சுவையை அள்ளூறி வியந்து

பாராட்டுகிறார்.

அவ்வவ் விடங்களில் "Quite natural” என்றும், "Natural Discription” என்றும், "Fine Natural Discription" என்றும், "Observation of Nature” என்றும் வரைகிறார்.

வல்வில் ஓரி ஏவிய அம்பு வேழத்தையும் வேங்கையையும் மானையும் பன்றியையும் முறையே வீழ்த்தி உடும் பொடுபட்டுத் தங்கியமையை "Natural hyper bole skill in Archer” என்று நயந்து பாராட்டுகிறார். அதன் அடிக்குறிப்பில் “அலையுருவ” “வெய்ய வாளியை "ஏழு மாமரம் மாமரம்" எனக் எனக் காட்டப் பட்டுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/208&oldid=1578337" இலிருந்து மீள்விக்கப்பட்டது