பக்கம்:மறைமலையம் 7.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் 7

·

போட்டுக் காட்டியவர் அவர். ஆதலால் அவர் பயின்ற நூல்களின் உள்ள சொல்லாய்வுக் குறிப்புகள் மிகப் பலவாம்.

இது தமிழ்ச் சொல், இது வடசொல் எனக் காட்டுவதை அன்றி, ஆங்கிலச் சொல் முதலியவற்றுக்குத் தக்க தமிழ்ச் சொல் உண்டாயின் அவற்றையும் சுட்டுகிறார்.

66

உருள்” என்னும் சொல்லை ‘Wheel' என்பதற்கு ஏற்றதாகக் குறிக்கிறார். “வானவூர்தி” என்னும் சொல்லுக்கு "Aeroplane" என்று குறிக்கிறார்.

.

சொல்வகை காட்டுவதுடன் அரிய சொற்களுக்குப் பொருளும் எழுதுகிறார். உரை இ - உலவி; சுரை - உட் உட்டுளை; வங்க - வளைய; தொன்றி தெற்கு - இன்னவை பல.

சொற்றொடர் விளக்கமும் ஆங்காங்குக் குறிப்பிடுகிறார்

"வழி முடக்கு மாவின் பாய்ச்சல்” “கோமுத்திரி” என விளக்கம் காட்டுகிறார்.

என்பதற்குக்

"நரந்தை நறும்புல்" என்னும் தொடர்க்கு “நறுமணம் வாய்ந்த புல்லும் நரந்தை எனப் பெயர் பெறும்” என விளக்கம் தருகிறார்.

66

'பிணர்

-

நால்வகை ஊறுகளுள் ஒன்று; இதனை ஜர்ஜ்ஜரா என்பர் வடமொழியாளர்; அது தமிழில “சருச்சரை’ என வழங்கும், இக்காலத்தில் சுரசுரப் பென்பதும் அது என்னும் விளக்க வுரையில் (குறுந். 13) ஏன் இச் சொல்லில் (சருச்சரை) இருந்து (ஜர்ஜ்ஜரா) வந்த தாகாது? வினாவுகிறார்.

-

-

என

இச்சொல் இவ்வாறு திரிந்தது எனக் காட்டுவதுடன் ஐயுறத் தக்கதாயின “போலும்” என்னும் வாய்பாடு பொருந்த அமைக்கிறார். பக்கம் பக்கு எனத் திரிந்தது. அயங்கு அசங்கு என்பது அயங்கு என்றாயிற்றுப் போலும் என்பவை இவ்வகைக் குறிப்புகளாம். வழக்குச் சொல், அரிய வழக்குச் சொல் என்ப வற்றையும் அடிகளார் ஆங்காங்குச் சுட்டுகிறார். பெண்டாட்டி வழக்குச் சொல். யாரளோ சுயசந; கொடுக்குவர் - அரிய வழக்குநற்கு - Rare Use என்பவை இவற்றுக்குச் சான்றாவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/211&oldid=1578340" இலிருந்து மீள்விக்கப்பட்டது