பக்கம்:மறைமலையம் 7.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

பிரித்துக் காட்டலும் இயைத்துக் கூட்டலும் :

187

சில அருஞ்சொற்களைப் பிரித்துக் காட்டி விளக்கம் புரிகிறார் அடிகளார். அவ்வாறு பிரித்துக் காட்டுதல் பொருள் விளக்கத்திற்கு இன்றியமையாமை உடையதாம்.

"போணிலா' என்பதைப் “போழ் நிலா" என்றும்,

“எட்டனை என்பதை ‘எள்தனை' என்றும் பிரித்துக் காட்டுகிறார்.”

"கொட்ட முழவிட்ட வடிவட்டணைகள் கட்ட” என்னும் தேவாரத் தொடரை,

66

முழவொலிக்கு இசைய இட்ட அடிகள் தாங்கட்ட என்க” என எழுதி இயைத்துக் காட்டுகிறார்.

வைப்பு முறை கூறல் :

அடிகளார் தம் சொற்பொழிவில், பொழிவு நிறைவில் சான்னவற்றைத் தொகுத்துக் கூறுதலை ஒரு நெறியாகக் கொண்டிருந்தார். அம்முறையைக் கட்டுரைகளிலும்,

நூல்களிலும் மேற்கொண்டார். அதன் சுவடு அவர் பயின்ற நூல்களிலும் காண வாய்கின்றது.

திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களைக் கற்ற அவர்,

66

எட்டாஞ் செய்யுட்கடோறும் இராவணனை ஒறுத் தருளினமை கூறுவர்,’

ஒன்பதாஞ் செய்யுட்கடோறும் திருமால் நான்முகன் என்பார்க் கெட்டாத நிலை கூறுவர்: பத்தாம் பாட்டுக்கடோறும் அமணரைப் பழிப்பர் என்று கூறுவது வைப்பு முறை கூறலாம்.

இன்னவையே யன்றிப் பிற வகையாலும் பகுத்து ஆராயும் வகையில் அவர்தம் நூல்பயில் குறிப்புகள் உள. காலமெல்லாம் கற்றுக் கொண்டே இருத்தல் ஆசிரியர்க்கும் ஆய்வாளர்க்கும் இன்றியமையாதது. இவ் வகையில் அடிகளார் தேடிக் கொண்ட அறிவுப் பரப்பு பெரிதாம். அவர்தம் நாட்குறிப்பில் காணப்பெறும் சில குறிப்புகள் அதற்குச் சான்றாவன :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/212&oldid=1578341" இலிருந்து மீள்விக்கப்பட்டது