பக்கம்:மறைமலையம் 7.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

கால ஆய்வு முறை :

மறைமலையம் - 7

புதிது புகுந்த தமிழ்ச் சொல் வடசொற்களாலும், முற்காலத்தின்றிப் பிற்பிற் காலங்களில் தோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன்நூல்களில் இன்றிப் பின் நூற்களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராணக் கதைகளாலும், முற்பிற் காலங்களிலும் பொருள் வேறுபட்ட சொற்களாலும், சமயக் கோட்பாடுகளாலும், காலங்கள் தோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர் நூலிலுள்ள சொற் பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம் நூலுள் எடுத்தாளும் வகைகளாலும், முன்னிருந்தோரைப் பின்னிருந்தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சிகளாலும், அவ்வந் நூல்களில் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக்குச் செய்த தொகைகளாலும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயினவற்றில் புலனாம் அரசர்களின் காலக் குறிப்புகளாலும், வடமொழி நூல்கள் அயல் நாட்டவர் வரைந்து வைத்த வரலாற்று நூல்கள் முதலாயின வற்றில் தமிழர் ஆரியர் பற்றி நுவலும் பகுதிகளாலும் இன்னோரன்ன பிறவற்றாலும் தமிழாசிரியர் தமிழ் நூல்களின் காலவரையறைகளும், அவ்வக் கால இயல்புகளும் அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவு படுத்தப் பட்டிருக்கின்றன.

சான்று :

இவ்வாறு செய்கின்றுழி, ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் று காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப்பட்ட மேற்கோள் உள்ள நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களும் சுட்டிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப் பட்டிருத்த லால், இந்நூலைக் கற்பவர்கள் யாம் செய்து காட்டும் ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்றுகளைத் தாமும் எளிதிற் கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல் கூடும்.

பெரும்பாலும் தமிழில் உரைநூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதும் அறிஞர்கள் தமதுகோட்பாடுகட்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/217&oldid=1578346" இலிருந்து மீள்விக்கப்பட்டது