மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
195
உதவிகொண்டு இச் செய்யுட் பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் எளிதேயாம்.
னி
இனி இவ்வருஞ் சொற்கட்குப் பொருள் வரையுங்கால் இம்முல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண் வந்த சாற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள் களையும் எடுத்துக்காட்டியிருக்கின்றேம்.
ப
ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனை அடுத்து வந்த காலத்தும் அச்செய்யுட் சொற்கட்குப் பொருள் தெளிவது அச் செய்யுள் ஆக்கியோன் கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாம் ஆதலின், இங்ஙனஞ் சொற்பொருள் துணிவிக்கும் முறையைத் தமிழாராய்வோர் அனைவரும் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்க முடையதாகித் திகழும்” என்கிறார். இக்கருத்தைப் பட்டினப் பாலை இரண்டாம் பதிப்புரையிலும் எழுதுகிறார்.
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்யுரை என்னும் இரண்டிலும் மற்றுமொரு கருத்தை ஆராய்ச்சியாளர்க்கும் நூலியற்று வார்க்கும் வற்புறுத்துகிறார், இக்கருத்து அடிகளார் நூல்கள் அனைத்திலும் கொண்டு போற்றப்பட்டதும், அவர்க்குத் தனிப்பெருமை சேர்த்ததும்
ஆகிய கடைப்பிடியாகும்.
66
வ்வாராய்ச்சி யுரையின்கண் மற்றொரு முதன்மையான சீர்திருத்தமும் செய்திருக்கின்றேம். தொன்று தொட்ட சிறப்பும், இலக்கண இலக்கிய வரம்பும், தனக்கெனப் பன்னூறாயிரம் சொற்களும் வாய்ந்து இன்றுகாறும் வழக்குவீழாது உயிரோடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம்.
சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாதது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழி களையும், அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார் போற்றம்மை