196
மறைமலையம் - 7
எண்ணிக் கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முயன்றுவர எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதும் கைவிட்டிருத்தல் நிரம்பவும் இரங்கற் பால தொன்றாம். இனியேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழிற் பேசவும் எழுதவும் கடைப்பிடியாய்ப் பழகிவரல் வேண்டும். இதனை முன் நடந்து காட்டும் பொருட்டு, இதற்கு முன் யாம் எழுதிய நூல்களிற் புகுந்த சிற்சில அயன்மொழிச் சொற்களையும் அந்நூல்களைத் திரும்பப் பதிப்பிட்டு வரும். இப்போது முழுதும் களைந்து விட்டு, அவை நின்ற இடத்திற் தூய தமிழ்ச் சொற்களையே நிரப்பி வருகின்றேம்” என்கிறார்.
இக்கொள்கை, அடிகளின் அரிய பெரிய ஆராய்ச்சித் திறனால் கண்டு ஓரியக்கப்படுத்தி வளர்க்கவும் தமிழ் வளமாக்கவும் ‘தமிழ் உயர் தனிச் செம்மொழி' என்பதை உலகுக்கு நிலைப்படுத்திக் காட்டவும் ஏந்தாக அமைந்த தாகலின் ஆய்வியல் நெறிமுறை களுள் ஒன்றாகக் கொள்ளத்தக்கது ஆயிற்றாம்.