பக்கம்:மறைமலையம் 7.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் 7

தவச் சாலையில் வளர்ந்த மங்கை சூழ்ச்சி யறியாள் என்று களதமி கூறியபோது அரசன், கற்றுக் கொள்ளாமலே வரும் திறம் என்பதைக் குறிக்கும் வகையால் தம் குஞ்சுகள் வாளின்கட் பறக்கும் வரையிற் குயிற்பெடைகள் அவை தம்மை வேறு பறவைகளைக் கொண்டு வளர்த்து வரல் உண்மையன்றோ?” என்கிறான்.

பெடைகள்

இதனை விளக்கும் அடிகளார், “குயிற்பெடைகள் தாம் இடும் முட்டைகளை அடை காக்கத் தெரியா வாகலால், அவை தம் முட்டைகளைக் காக்கையின் கூடுகளில் இடக், காக்கைப் அவற்றையும் தம்முட்டையென்றே க கருதி அடைகாத்துக் குஞ்சு பொரித்துப் பொரித்த குயிற் குஞ்சுகளுக்குத் தங்குஞ்சுகளுக்கு ஒக்கச் சேர்த்து இரை கொடுத்து வளர்த்தமையும், வளர்த்தபின் அக்குயிற் பிள்ளைகள் காக்கையை விட்டுப் பறந்தோடிப் போதலையும் தோப்புகளில் இன்றும் பார்க்கலாம். அரசன் எடுத்துக் காட்டிய இவ்வுவமையின் வாயிலாக, மேனகைக்குப் பிள்ளையாகப் பிறந்தும் சகுந்தலை அவளால் வளர்க்கப்படாமல் காசிபரால் வளர்க்கப்பட்டு வளர்ந்த குறிப்பும் ஈண்டு நாடக ஆசிரியர் உய்த்துணர வைத்தல் காண்க என்கிறார்.

நாடக நூற் குறிப்புகளிலேயே இவ்வாறு பல பல ஆய்வுத் திறங்களைக் காட்டிக் காட்டிச் செல்கிறார்.

கோகிலாம்பாள் கடிதங்கள் அடிகளார் எழுதிய புனை கதை நூல். கடித வழியாகக் கதை சொல்லும் உத்தியில் வெளிவந்தது, அதன் முகப்பிலே புனை கதை அமைப்பு, பயன்பாடு எத்தகையவாக இருத்தல் வேண்டும் என்பதை ஆராய்ந்து எழுதுகிறார்.

உலக வழக்குக்கு மாறுபடாமை

உற்றவாறே எடுத்துரைத்தல்

விழுமியதாகத் தொடுத்தல்

இவை புனைவாளன் கடமை எனப் புகல்கின்றார்.

உலக இயற்கையிலும் மக்கள் இயற்கையிலும் ஒரு சிறிதும் காணலாகாதவைகளைப் படைக்க, அவற்றை ஆய்ந்து பாராமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/229&oldid=1578358" இலிருந்து மீள்விக்கப்பட்டது